தமிழகத்தில் இன்று
உடுமலை குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
கோவை:
உடுமலைப் பேட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
உடுமலையில் கடந்த 1997 ம் ஆண்டு ஒரு வணிக வளாகத்திற்கு முன்பு, சைக்கிளில்வைத்திருந்த குண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேர்கைது செய்யப்பட்டனர். இதில் ரியாஸ் என்பவர் அப்ரூவராக மாறினார். எனவே, இந்தவழக்கில் 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை நடத்தி வரும் தனி நீதிமன்றத்தில் 10 பேரும்ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி தணிகாசலம், ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு வழக்குவிசாரணையைத் தள்ளி வைத்தார்.
கலவர வழக்கு: கோவை அரசு மருத்துவமனையில் நடந்த கலவர வழக்கில் இதுவரை10 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 4 பேர்உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, கோவைஇரண்டாவது கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில், இதுவரை 10 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications