தமிழகத்தில் இன்று
பட்டினிப் போருக்குத் தயாராகும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துள்ள ராணுவ வீரர்களைப் பார்க்க இலங்கை அரசு அனுமதி தர மறுத்தால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்என்று ராணுவ வீரர்களின் குடும்பத்தார் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காணாமல் போன ராணுவ வீரர்கள் குடும்பங்களின் சங்கத் தலைவர் நானயாகரா கூறியிருப்பதாவது:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப்புலிகள் ராணுவ வீரர்கள் பலரைபிடித்து வைத்துள்ளனர். ராணுவ வீரர்களின் குடும்பத்தின் சார்பில், அவர்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி தரும்படி மூன்று வாரங்களுக்கு முன் அதிபர்சந்திரிகாவிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், சந்திரிகா லண்டன் சென்றிருப்பதால் உடனடியாக பதில் கிடைக்கவில்லை. இதனால், எங்களதுகோரிக்கையை பேக்ஸ் மூலம் அவருக்குத் தெரிவித்துள்ளோம். அவரது பதிலுக்குகாக இப்போது காத்திருக்கிறோம்.
ஒருவேளை அதிபர் சந்திரிகா அனுமதி அளிக்காவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. வவுனியாவில் சிலபகுதிகள் அரசின் கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
எங்களுக்கு அரசு அனுமதி கொடுத்தால் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ வீரர்களை எந்த பிரச்சனையுமின்றி சந்திப்பதற்கு உதவி செய்வதாகசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதி கூறியுள்ளது.
விடுதலைப்புலிகளின் பிடியில் உள்ள ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்திப்பதற்கு அவர்களது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கனவேஅதிபர் சந்திரிகா மே மாதம் அறிவித்திருந்தார். ஆனால் எப்போது என்று அவர் இன்னும் தெரிவிக்கவில்லை என்றார்.
முன்னதாக விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த 15 ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்க அனுமதி கேட்டு பிப்ரவரி 10 ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்யும்படி செஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப்புலிகளுக்கு கோரிக்கை விடுத்தது.இதையடுத்து 4 பேரை மட்டும் விடுதலைப்புலிகள் விடுவித்தனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதம் இருந்த வீரர்களின் குடும்பத்தார் 28 பேர் அவர்களை நேரில் சென்று சந்தித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று ராணுவவீரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications