தமிழகத்தில் இன்று
"பயங்கரவாதத்தைக் கைவிட மாட்டார் பின் லேடன்
இஸ்லாமாபாத்:
சர்வதேச பயங்கரவாதியான ஒஸாமா பின் லேடன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தாலிபான் தலைவர் முல்லா முகம்மது ஓமர்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் வெளியாகும் தாலிபான் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஒஸாமா பின் லேடன் செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை.அவ்வாறு வரும் செய்திகள் தவறு.
அப்படி பின் லேடன் தனது செயல்பாட்டை மாற்றிக் கொண்டால் அது இஸ்லாமிய மதத்தின் ஒரு தூணை இடித்தது போல் ஆகும். ஆகவே, அந்த நடவடிக்கையில்பின் லேடன் ஈடுபடமாட்டார்.
ஆப்கானிஸ்தானில் எந்த தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களும் இல்லை. ஆப்கானிஸ்தானை தங்களது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள எந்தஅமைப்புக்கும் உரிமை இல்லை.
ஆப்கானிஸ்தானில் ஷரியா அமைப்பின் கீழ் தாலிபான் செயல்பட்டு வருகிறது. பின் லேடனையும் மற்றும் பலரையும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரதாலிபான் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்று கருதுகிறேன். அப்படி மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்குத்தான்நஷ்டம் ஏற்படும். ஆகவே, அடுத்த நடவடிக்கை பற்றி பற்றி அமெரிக்கா யோசிக்கவேண்டும்.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளும் பிற நாடுகளுக்கு இடம் கொடுத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு அளிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் மீது யார் தாக்குதல் தொடுத்தாலும் அவர்களை எதிர்க்க நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம். ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும்இடையே ஏற்பட்டுள்ள உறவை அடுத்து, இரு நாடுகளும் ஆப்கன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது என்றார் முல்லா முகம்மதுஓமர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தனது தூதரங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச பயங்கரவாதியான ஒஸாமாபின் லேடனை தன்னிடம் ஒப்படைக்கும்படி தாலிபான் அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications