தமிழகத்தில் இன்று
ஜெ.வழக்கில் சாட்சி அளிப்பாரா சுப்ரமணியசாமி?
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி அரசுத் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது ரூ 66 கோடிசொத்துசேர்த்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு சென்னை முதலாவது தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் தலைமையில் நடந்து வருகிறது.இது தொடர்பாக சசிகலா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சசிகலா நீதிமன்றத்திற்குவரவில்லை. இளவரசி ஆஜரானார்.
சசிகலா தரப்பு வக்கீல்கள் அவர் ஹைதராபாத் சென்றுள்ளதால் அடுத்த வாரம் வந்துவிடுவார் என்று சசிகலாஆஜராகாததற்கான மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இரண்டாவதாக இந்தியன் வங்கிஅபிராமபுரம் கிளை காசாளர் ரவிச்சந்திரன் என்பவர் சாட்சியம் அளித்தார். அதற்குப்பின் நீதிபதி அரசுத்தரப்புவக்கீல் சோமசுந்தரத்திடம் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப் போகிறீர்கள் என்றார்.
அதற்குப்பதிலளித்த வக்கீல் சோமசுந்தரம், வழக்குத் தொடர்பாகப் புகார் கொடுத்த ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணியசாமி, ஆடிட்டர் ராஜசேகர் உள்ளிட்ட 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்போகிறோம் என்றார்.
சுப்ரமணியசாமியை விசாரிக்க வேண்டுமா? அவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலா வழக்குப் பதிவு செய்தீர்கள்என்று நீதிபதி கேட்டதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வக்கீல் சோமசுந்தரம், சுப்ரமணிய சாமியை விசாரிக்கவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் புகார் கொடுக்கும்முன்னரே எங்களுக்குத் தகவல் கிடைத்து விசாரிக்க ஆரம்பித்து விட்டோம் என்றார்.
இதனால் இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியானஜெயலலிதா ஆகஸ்ட் 2 ம் தேதி நடக்கும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்றார். கண்டிப்பாகஆஜராவார் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் கூறினார்.
அதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வக்கீல், அவர் எத்தனை முறை ஆஜராகியிருக்கிறார் என்பது நீதிமன்ற வருகைப்பதிவேட்டைப் பார்த்தாலே தெரியும் என்று கூற சிறிது நேரம் காரசாரமான விவாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிஇவ்வழக்கை 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications