தமிழகத்தில் இன்று
சூனியக்காரி என சந்தேகிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை
அகர்தலா: (திரிபுரா)
மேற்கு திரிபுராவில் உள்ள டாய்ராஜ்பாரி எனற கிராமத்தில் ஒரு பெண்ணைசூனியக்காரி என சந்தேகித்த மக்கள் அடித்துக் கொன்றனர்.
டாய்ராஜ்பரி கிராமத்தில் மங்கலேஸ்வரி தேபரம்மா என்பவர் பல நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்து வந்தார். இதையடுத்து கிராமத்து வைத்தியரான லட்சுமிராணி தேபரம்மா என்பவரை சிகிச்சைக்காக அழைத்தனர்.
லட்சுமி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது மங்கலேஸ்வரி இறந்து விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் லட்சுமியை அடித்துக் கொன்றுவிட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வியாழன்றுநடந்தது
கடந்த பல வருடங்களாகவே இப்பகுதியில், பல மலைச்சாதி பெண்கள் சூனியக்காரிஎன்ற சந்தேகம் காரணமாக கொல்லப்பட்டு வருகின்றனர் என்று காவல் துறையினர்தெரிவித்தனர்.
இந்த நிலையில், மிகவும் அழுகிய நிலையில் மலைச் சாதிபெண் ஒருவரின் உடலைவியாழக்கிழமையன்று போலீஸார் கண்டுபிடித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications