தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பாண்டி பா.ம.க. எம்.எல்.ஏ பதவி தப்புமா?

பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மஞ்சினி, பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தது தொடர்பாகவிளக்கம் கேட்டு அவருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாண்டிச்சேரியில் வலது கம்யூனிஸ்ட் கட்சியில் விஸ்வநாதன், மஞ்சினி ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் இருந்தனர்.ஆறு மாதங்களுக்கு முன் மஞ்சினி வலது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பா.ம.க வில் சேர்ந்தார்.இதனையடுத்து மஞ்சினியின் பதவியைக் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி பறிக்க வேண்டும் என்று விஸ்வநாதன்,அப்போதைய சபாநாயகர் சிவகுமாரிடம் புகார் மனு ஒன்றை சமர்ப்பித்தார்.

இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் பாண்டிச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சண்முகம்முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சபாநாயகராக ஏ.வி.சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீண்டும் மஞ்சினி பதவி பறிப்பு விவகாரத்தைக் கையில்எடுத்தனர். இப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சபாநாயகரை முற்றுகையிடுவோம் என்றும் மிரட்டல்விடுத்தனர்.

இதனையடுத்து புதன்கிழமை எம்.எல்.ஏ மஞ்சினிக்கு சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+