தமிழகத்தில் இன்று
பிஜி இடைக்கால அரசில் ஸ்பீட் ஆதரவாளர்களுக்கு "கல்தா"
சுவா:
பிரதமர் லெய்சேனியா கராசே தலைமையில் வெள்ளிக்கிழமை பதவியேற்ற பிஜி இடைக்கால அரசில் புரட்சியாளர் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் யாரும்இடம் பெறவில்லை.
கடந்த 19-ம் தேதி திடீர் புரட்சி நடத்தி அப்போது பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர சவுத்ரி உள்பட பலரை ஜார்ஜ் ஸ்பீட்பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.
அதன்பிறகு பிஜியில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். புதிய இடைக்கால அரசில் தனதுஆதரவாளர்கள் 20 பேர் இடம் பெற வேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறினார்.
இதையடுத்து ஜோஸெஃபா இலாய்லோ புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் ஜார்ஜ் ஸ்பீட்டின்ஆதரவாளர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.
புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு ஜார்ஜ் ஸ்பீட் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தனது கோரிக்கைகள்ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தனது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்றார்.
இந் நிலையில், தொடர்ந்து மிரட்டல் தெரிவித்து வந்த ஜார்ஜ் ஸ்பீட் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய அரசை அதிபர்இலாய்லோ நியமித்தார்.
பிரதமர் கராசே தலைமையில் புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது. இதில் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இல்லை.ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்த 4 பேரும் நீக்கப்பட்டனர்.
துணைப் பிரதமராக ராது எபேலி நெய்லடிகாவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு பேசிய அதிபர் கராசே, நாட்டில் நிலவும்அமைதியின்மையைப் போக்க பிஜி நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications