தமிழகத்தில் இன்று
வறுமைக்கு பெற்ற குழந்தைகளைப் பலி கொடுத்த தாய்
சேலம்:
சேலத்தில் வறுமையின் கொடுமையால் இரண்டு குழந்தைகளைத் தீ வைத்துக் கொன்ற தாய், தன் மீதும்மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார்.
சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே கோரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு கோபி (7), அருணா (5), தேவி (10) ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள் குடும்பம் வறுமையினால் வாடி வந்தது. இதனால், கணேசன் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டார். அவர் குடும்பச் செலவுக்குப் பணம் அனுப்பாததால், ஜெயந்தி குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய மிகவும் சிரமப்பட்டார். அக்கம் பக்கத்தில் கடன் பெற்று, சிறிது நாட்களைக் கடத்தினார்.
அருகில் இருந்த பஞ்சாயத்து ஆபீசில் வேலை பார்த்து வந்த ஜெயந்தி, உடல்நலக் குறைவால் அந்த வேலையையும்விட்டு விட்டார். வறுமையால் வாடிய ஜெயந்தி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
எனவே, வியாழக்கிழமை இரவு 3 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றினார். அப்போது விழித்துக்கொண்ட மகன் கோபி, வெளியே ஓடி விட்டான். இரண்டு குழந்தைகள் மீதும் தீ வைத்து விட்டு, தன் மீதும்மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஜெயந்தி.
3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தோர், தீயை அணைத்து, 3 பேரையும் மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால், இதில் இரண்டு குழந்தைகளும் இறந்தன. ஜெயந்தி அபாயக் கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications