தமிழகத்தில் இன்று
ஆதரவற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் தெ.ஆப்பிரிக்கத் தமிழர்கள்
பிரிடோரியா:
எந்த நாட்டில், எந்த பகுதியில் வாழ்ந்தாலும், தங்களது உதவும் மனப்பான்மை எப்போதும் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்தென் ஆப்பிரிக்காவில் லாடியம் பகுதியில் வசிக்கும் தமிழர்கள்.
காடெங் மாகாணத்தில் உள்ள லாடியம் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து லாடியம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர். இச் சங்கத்தின் மூலம் நிதிதிரட்டி ஆதரவற்றவர்களுக்கு அவர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இச் சங்கத்தின் மூலம் தமிழர்கள் செய்யும் உதவிகளை அப் பகுதியில் வசிக்கும் மற்ற இனத்தவர்கள் பாராட்டி வந்தாலும், சமீபத்தில்ஆதரவற்றவர்களுக்கு அவர்கள் கம்பளிப் போர்வைகளை வாங்கிக் கொடுத்துள்ளது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இது பற்றி சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சின்னசாமி கூறியதாவது:
லாடியம் பகுதியில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சங்கத்தின் மூலம் உதவி செய்து வருகிறோம். ஆதரவற்றோர் மற்றும் உதவிதேவைப்படுவோர் என அனைவருக்கும் நாங்கள் உதவி செய்கிறோம்.
சிலருக்கு தினமும் சாப்பாடு கொடுத்து வருகிறோம். எப்போதும் இல்லாத அளவுக்கு காடெங் மாகாணத்தில் கடும் குளிர் நிலவுகிறது. கடந்த வாரம்உதவிகளை சங்கத்தினர்கள் அளிக்கச் சென்றபோது, குளிரைச் சமாளிக்க கம்பளிப் போர்வைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஆதரவற்றவர்கள்கேட்டுக் கொண்டனர்.
இக் கோரிக்கையை ஏற்று லாடியம் பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே நிதி திரட்டி தேவையான கம்பளிப் போர்வைகளை வாங்கிதேவைப்பட்டவர்களுக்குக் கொடுத்தோம். இந்த உதவியை அப் பகுதியில் உள்ள பிற இனத்தவர்களும், பிற சங்கத்தினரும் வெகுவாகப் பாராட்டினர்.
யார், யாருக்கு எப்போது எந்தவகையான உதவி தேவைப்படும் என்பதைத் தெரிந்து நாங்கள் உதவி செய்து வருகிறோம். இச் சேவை தொடரும்.பாராட்டுக்காக மட்டும் இதை நாங்கள் செய்யவில்லை என்றார் கிருஷ்ணா சின்னசாமி.
வெல்டன் தமிழர்களே...!
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications