தமிழகத்தில் இன்று
அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ்: தமிழகம் சாம்பியன்
புதுவை:
புதுவையில் நடைபெற்ற அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டியில் 14 வயது மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் ஆண்கள் மற்றும்பெண்கள் பட்டத்தை தமிழக வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
புதுவை டென்னிஸ் சங்கம் சார்பில் இப் போட்டி நடத்தப்பட்டது. இறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்களுக்கான 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் விஜய சுந்தர் பிரசாந்த்தும், 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சோமதேவ்கே. தவ்ே வெர்மானும் பட்டம் வென்றனர்.
பெண்களுக்கான 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் சரண்யா பட்டாபியும், 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நிவேதிதாவெங்கடேஷும் பட்டம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு புதுவை டென்னிஸ் சங்கத் தலைவர் டாக்டர் நல்லாம் பரிசுகளை வழங்கினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications