தமிழகத்தில் இன்று
ஜன்னல் வழியே நுழைந்து 150 பவுன் நகை கொள்ளை
சென்னை:
வங்கி அதிகாரி வீட்டில் ஜன்னல் கம்பிகளை உடைத்து 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை,தி.நகரில் வசிக்கும் வாசுதேவன் வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாசாலையில் உள்ள சிட்டி வங்கியில் மானேஜராக வாசுதேவன் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரதுதந்தை இறந்துவிட்டதால், துக்கம் விசாரிக்க உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
உறவுக்காரப் பெண்கள் எல்லாம் தாங்கள் அணிந்து வந்த நகைகளை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தனர்.வியாழக்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்கமாக திருடர்கள் உள்ளேநுழைந்தனர்.
ஜன்னல் கிரில் கம்பிகளைப் பெயர்த்து எடுத்து உள்ளே நுழைந்த இருவரும், திறந்திருந்த பூஜை அறைக்குள் சென்றுஅங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 150 பவுன் நகைகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த நகைகளைக் காணவில்லை. இதையடுத்து உடனேபோலீஸாருக்கு வாசுதேவன் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த வீட்டுக்கு கமிஷனர் காளிமுத்து, கூடுதல்கமிஷனர் பாலசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துக் கொண்டே பக்கத்து தெருவரை ஓடிச் சென்று நன்றது.கொள்ளையர்களைப் பிடிக்க கிண்டி துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனி போலீஸ் படைஅமைக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications