தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மகளைக் கொன்று தானும் இறந்த தாய்

சென்னை:
கணவர் மீதிருந்த ஆத்திரத்தால் பெற்ற குழந்தையை எரித்துக் கொன்று தாய்தீக்குளித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.

சென்னை அருகேயுள்ள பொன்னேரி பெரும்பேடு கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த நாராயணனின் மகள் உஷாவுக்கும், அதே பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் இடையே 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.பாலகிருஷ்ணன் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

திருமணத்துக்குப் பின் உஷா வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு விஜயலட்சுமி(13), சாந்தி (12) என்ற இரு மகள்கள் உள்ளனர்

சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அது தவிர நாராயணனுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.இத் தகராறு காரணமாக மகளிடம் நாராயணன் கோபப்பட்டுள்ளார்.

தன் மீது தந்தை கோபப்படுவதற்கு கணவர் தான் காரணம் என்று கருதிய உஷா,மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மகள்களை அழைத்துக்கொண்டு கும்மிடிப்பூண்டிக்குச் சென்றார் உஷா. அங்கு, மகள் விஜயலட்சுமி காதில்இருந்த கம்மலைக் கழற்றி அடகு வைத்து ரூ.250 பெற்றார். அந்த பணத்தில்மகள்களுக்குப்
பிரியாணியும், 7 லிட்டர் மண்ணெண்ணெய்யும் வாங்கினார்.

பின்னர் அங்கிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். எங்கள்சாவுக்கு யாரும்காரணமில்லை என்று ஒரு பேப்பரில் எழுதும்படி விஜயலட்சுமியிடம்உஷா கூறியுள்ளார். விஜயலட்சுமியும்

அவ்வாறே எழுதிக் கொடுத்தார். ஆனால், அவர் சாக விரும்பவில்லை. அது பற்றிதாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து விஜயலட்சுமியையும் மற்றொரு மகள் சாந்தியையும் சமாதானப்படுத்திதூங்க வைத்தார் உஷா. சனிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த இரு மகள்கள்மீதும் உஷா மண்ணெண்ணெய் ஊற்றினார்.

விழித்துக் கொண்ட விஜயலட்சுமி ஓடிவிட்டார். ஆனால், சாந்தி மீது தீ வைத்துவிட்டுதன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார் உஷா.

தப்பியோடிய விஜயலட்சுமி நேரே கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்துக்குச் சென்றுநடந்த சம்பவத்தை விளக்கினார். உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.

அங்கு உஷாவும் சாந்தியும் உடல் கருகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.உடனே இருவரையும் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆனால்,இருவரும் இறந்துவிட்டனர்.

இச் சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+