தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது

கோவை:
போராட்டம் நடத்தி வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமைதிடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் சட்டக் கல்லூரி துவங்க பார் கவுன்சில் அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்யக்கோரி, கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்துஉண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்து வருவோரில் 23 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களைக் காண வந்த மாணவர்கள், திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர். சில பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் போக்குவரத்து வேறுவழியாகத் திருப்பி அனுப்பப்பட்டது.

மாணவர்கள் பிரதிதிகளுடன் மாவட்டக் கலெக்டர் சந்தானம் நடத்திய பேச்சுவார்த்தைபயனளிக்காததால், உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது.

பார்கவுன்சில் அனுமதியை வாபஸ் வாங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிடப் போவதில்லை என மாணவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில்,உண்ணாவிரதத்தில் மயக்கமடைந்த மாணவர்கள் சிகிச்சை பெற மறுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+