தமிழகத்தில் இன்று
புலிகளுக்குத் தடை விதிக்க இங்கிலாந்தைக் கோருகிறது இலங்கை
கொழும்பு:
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில்தடை விதிக்கப்படவில்லை. இந்நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோதமான இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துஇவ்வியக்கத்திற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில்தான் விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. புலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுஇங்கிலாந்து அரசை நீண்ட காலமாக இலங்கை வற்புறத்தி வந்தது.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், இங்கிலாந்து சென்றிருந்தபோது, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்பீட்டர் ஹெயினியிடம், விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்குமாறு முறையாக கேட்டுக்கொண்டார்.
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் உச்சகட்டத்தையடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம், பணம் போன்றஉதவிகள் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்றன. இதனால் இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று லட்சுமண்கதிர்காமர் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பீட்டர் ஹெயின், இலங்கையின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்வது குறித்து இலங்கைஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
இரண்டு வாரங்களுக்கு முன் கொழும்பு வந்திருந்த இங்கிலாந்து துணை தூதர் லின்டா பீல்டு, அங்குள்ள வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசுகையில், இங்கிலாந்தில்ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் பிறகு விடுதலைப் புலிகள் சுதந்திரமாக செயல்படுவது சிரமமாகிவிடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications