தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் சந்திரிகா
கொழும்பு:
புதிய அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதில் இலங்கை அதிபர் சந்திரிகா தீவிரமாக இறங்கியுள்ளார்.
கண் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த சந்திரிகா சனிக்கிழமை கொழும்பு திரும்பினார். புதிய அரசியல் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியகட்சி மறுப்புத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டதிருத்த மசோதாவைநிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மசோதாவிற்குப் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார் அதிபர் சந்திரிகா. தமிழர் கட்சிகளுடன்மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் உள்பட பல்வேறு தமிழர் கட்சித்தலைவர்கள் சனிக்கிழமை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சு நடத்தினர். மீண்டும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா ஆகஸ்ட் 3 ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைத்து எம்பிக்களின் ஆதரவைதிரட்டவும் சந்திரிகா முடிவு செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில், மொத்தம் 225 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி கூட்டணிக்கு 150எம்பிக்கள் உள்ளனர். தமிழ் கட்சிகளில் 26 எம்பிக்களும் உள்ளனர்.
மசோதா நிறைவேற குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுகுறித்து அதிபர் சந்திரிகா மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார் என தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்புத் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications