தமிழகத்தில் இன்று
நீலகிரியில் வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் வன்றையைத் தூண்டியவர்கள் யார் என்பது குறித்து விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என நீலகிரியில் ஏ.டி.ஜி.பி.குமாரசாமி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்தனர். இதனைத் தடுக்க அதிரடிப் படைப் போலீசார்நீலகிரியில் முகாமிட்டனர்.
ஜூலை 28ம் தேதி சாலை மறியல் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். ஆனால்இதில் பதிலுக்கு விவசாயிகள் கல்லெறிந்ததால், அதிரடிப்படையினர், ரப்பர் குண்டுகளால் விவசாயிகளை நோக்கிச் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த தடியடி பிரயோகத்தில் பலர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில்ஏற்பட்ட இந்த பரபரப்பான சூழ்நிலையில், பஸ்கள் ஓடவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தற்போது நீலகிரியில் கலவரம் ஒடுக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டியில் ஏ.டி.ஜி.பி., குமாரசாமி கூறியதாவது:
நீலகிரியில் நடந்த தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 30 பேர் பெண்கள். போலீசார் நடத்தியதடியடி பிரயோகத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எஸ்.பி., ராமர்த்தி, பெருந்துறைஎஸ்.ஐ.,ஜமால், மற்றும 4 போலீசார் கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
உண்மையில் வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை ஒரு வாரத்தில் மாவட்ட கலெக்டரிடம்அளிக்கப்படும்.
மக்களை அச்சுறுத்துவது காவல்துறையின் நோக்கமல்ல. தேயிலை விவசாயிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். போலீஸ் துறை எப்போதும் மக்களின்நண்பனாகவே இருப்பார்கள்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விவசாயிகளின் குறைகளைக் களைய, அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications