தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கோவைக்கு இது கோலாகல வாரம்

கோவை:

கோவையில் ஆகஸ்ட் முதல் வாரம் முழுவதும் வி.ஐ.பிக்கள் விசிட், கண்காட்சிகள் என நகரே அமர்க்களப்படப்போகிறது.

கடந்த சில நாட்களாக கலை இழந்து இருந்த கோவை நகரம், தொடர்ந்து வரவுள்ள பல நிகழ்ச்சிகளால் களைகட்டத் தொடங்கியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 2ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகம், புதிய நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதிதிறந்து வைக்கிறார். கமிஷனர் அலுவலகம் ரூ. 2 கோடியே 81 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்களை ஒரே இடத்தில் மாற்றி அமைக்க ரூ. 11 கோடி செலவில்புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகத் திறப்பு விழாவிற்குக் காத்திருந்த இந்த இரண்டுகட்டங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

உடுமலைப் பேட்டையில், நாராயண கவி மணி மண்டபத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். எனவே, இந்தவிழாக்களில் கலந்து கொள்ளும் முதல்வர் கருணாநிதியை வரவேற்க கட்சிப் பிரமுகர்கள் மும்முரமாகக் களம்இறங்கியுள்ளனர். பல இடங்களில் கட் அவுட்டுகள் வைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி கோவை வருகிறார். இங்கு நடக்கும் காமராஜர்பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். சோனியாவை வரவேற்கவும் நகரெங்கும்சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள், தட்டிகளைகட்சியினர் வைத்து வருகின்றனர்.

ஆட்டோ போகஸ் 2000: ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கோவையில் "ஆட்டோபோகஸ் 2000 என்றகண்காட்சி நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், கார் மற்றும் இரண்டு சக்கரவாகனங்கள், பரிசோதனை முகாம்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. இந்தக் கண்காட்சி கொடீசியா கண்காட்சிவளாகத்தில் இடம் பெறுகிறது.

அக்ரி எக்ஸ்போ 2000: ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சுகுணா கல்யாண மண்டபத்தில் "அக்ரி எக்ஸ்போ2000 என்ற கண்காட்சி நடக்கிறது. இதில் விவசாயக் கருவிகள் பெருமளவில் இடம் பெறுகின்றன. இதனைதொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் துவக்கி வைக்கிறார்.

விழா ஏற்பாட்டாளர்கள் உன்னி தினகரன் மற்றும் வெங்கடேஷன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தக் கண்காட்சியில் 98 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர், மதுரை, நீலகிரி,பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, தாராபுரம், திருச்சி ஆகிய இடங்களிலிருந்து இக் கண்காட்சியைக் காணவிவசாயிகள் உட்பட பல தொழிலதிபர்கள் வருவர். மேலும், கேரளாவில் பாலக்காடு மாவட்டம், திருச்சூர் ஆகியஇடங்களிலிருந்தும் கண்காட்சிக்கு மக்கள் வருகை தர உள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த இந்த விழாவில், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டு,இரண்டு லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பங்கேற்கும் நிறுவனங்கள் புதிய பல பொருட்களை அறிமுகப்படுத்தவுள்ளன. 40 சதவீதபங்கேற்பாளர்கள் கோவைக்கு வெளியிலிருந்து வருகை தருகின்றனர்.

இதே போன்ற வேளாண்மை கருவி கண்காட்சிகள் கர்நாடகா மற்றும் கேரளாவில் விரைவில் நடத்தப்படும் எனத்தெரிவித்தனர்.

டானாபக்ஸ் 2000: தபால் துறை நடத்தும் தபால் தலைக் காண்காட்சியும் ஆகஸ்ட் 2 முதல் 6ம் தேதி வரைநடக்கிறது. இக் கண்காட்சியில் பழங்கால நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் இடம் பெறுகின்றன. இக் கண்காட்சிபத்மாவதியம்மாள் கலாச்சார மையத்தில் நடக்கிறது.

ஒரே வாரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் அமைந்துள்ளதால், பொதுமக்கள் அடுத்த வாரம் "பிஸி வாரமாகவேகருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+