தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ரூ. 100 கோடியில் இளையராஜா இசை ஆய்வு மையம்

சென்னை:

இசைஞானி இளையராஜா பெயரில் ரூ. 100 கோடி செலவில் இசை ஆய்வு மையம்அமைக்கப்படும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்தெரிவித்தார்.

இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய-தமிழ் இசை கலாசார பாரம்பரியத்துக்கும், மேற்கத்திய இசைக்கும் ஓர்இணைப்புப் பாலமாக இளையராஜா இசை ஆய்வு மையம் விளங்கும். அறக்கட்டளைகாப்பாளராக நானும், நிர்வாக இயக்குநராக இளையராஜாவும் இருப்போம்.

காஞ்சிபுரம் அருகே, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சுமார் 50 ஏக்கர்நிலப்பரப்பில் இந்த இசை ஆய்வு மையம் அமைக்கப்படும். உலகின் பல்வேறுநாடுகளில் இருந்து பல்வேறு மொழி பேசும் இசை நிபுணர்கள் இங்குவரவழைக்கப்படுவர். பல்வேறு இசைக் கருவிகளும் வரவழைக்கப்படும்.

இசை ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக விரைவில் உலக நாடுகள்பலவற்றுக்கும் இளையராஜா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இசை ஆய்வு மையத்தில், திருவாசகத்தில் வரும் நமசிவாய வாழ்க,

நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்றமணிவாகசகரின் பாடல் முதன் முதலாக டியூன் அமைத்து உலகம் முழுவதும் பரப்பும்வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

எனது பிறந்த நாள் அன்று கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு திறப்புவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு மையம் முழுவதும் குளிர்சாதன வசதிசெய்யப்படும் என்றார் ஜெயேந்திரர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை காஞ்சிபுரம் வந்தஇளையராஜா, சங்கர மடம் சென்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும்விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்தார். இசை ஆய்வு மையம் குறித்து இருசுவாமிகளுடனும் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+