தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜெ. மீது புது வழக்கு தொடருவேன் என்கிறார் சுவாமி

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது ஸ்பிக் பங்கு விற்பனை மோசடிதொடர்பாக சிபிஐ புதிய கிரிமினல் வழக்குத் தொடரும் என்று தமிழக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஸ்பிக் நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு விற்றதாக ஜெயலலிதாவுக்கும்ஏ.சி.முத்தையாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே ரூ.28 கோடி அபராதம்விதித்தது.

மேலும் ஜெயலலிதா மீதும் ஏ.சி. முத்தையா மீதும் கிரிமினல் வழக்குத்

தொடரவும் உத்தரவிட்டது. விரைவில் இவ் வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்படவுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு

எதிராக ஆகஸ்ட் 3-ம் தேதி நான் சாட்சி சொல்ல இருக்கிறேன். அப்போது புதியவழக்குத் தொடர்பாக பல திடுக்கிடும் ரகசியங்களைத் தெரிவிப்பேன்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கவேண்டும் என்று மூப்பனார் விரும்பினால்புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபடவேண்டும். அந்தஅணிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும்.

புதிய கூட்டணி ஆட்சியின் அவசியம் குறித்து பண்ருட்டி, திருச்சி, மதுரையில்பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன். ஜெயலலிதா, சசிகலா மீதான ஊழல் வழக்குகள்எல்லாம் நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும். அவர்களுக்குத் தண்டனைகிடைக்கப்போவது உறுதி.

அப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக தேநீர் விருந்து கொடுப்பேன்.

யார் முதுகிலும் குத்தும் எண்ணமுடையது பாரதீய ஜனதா கட்சி. திமுகவைக் கூடஏமாற்றத் துணியாது. இப்போதே முரளி மனோகர் ஜோஷியுடன் ஜெயலலிதா சார்பில்சசிகலா, தினகரன் இருவரும் ரகசியமாகப் பேசி வருகின்றனர் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+