தமிழகத்தில் இன்று
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தினான் வீரப்பன்
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டார்.
கன்னடத் திரையுலகின் எம்.ஜி.ஆர். என்று அழைக்கப்படுபவர் ராஜ்குமார். ஞாயிற்றுகிழமை இரவு 9.30மணியளவில் ராஜ்குமார் உள்பட நான்கு பேரை வீரப்பன் தலைமையில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரில் திங்கள்கிழமை காலைசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீட்டில் நடந்த வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராஜ்குமார் தனது சொந்த ஊரான காஜனூருக்குச்சென்றிருந்தார். வீட்டில் விசேஷங்கள் முடிந்த பின்னர், இரவு 9.30 மணியளவில் குடும்பத்தினர், உறவினர்களுடன்அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.
வீட்டிற்குள் நுழைந்த அக்கும்பல், ராஜ்குமாரிடம், தங்களுடன் வருமாறு கூறியுள்ளது. அப்போது வீரப்பனும் அங்குவந்ததாகத் தெரிகிறது. அதிர்ச்சியில் உறைந்திருந்த குடும்பத்தினரை அமைதிப்படுத்திய ராஜ்குமார் வீரப்பன்கும்பலுடன் கிளம்பினார். பின்னர் அக்கும்பல் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் ஒரு ஆடியோ கேசட்டைக்கொடுத்து, அதை கர்நாடக முதல்வரிடம் கொடுத்து விடும்படி கூறிவிட்டுச் சென்றது.
ராஜ்குமாருடன் சேர்த்து, அவரது சம்பந்தி நாகேஷ், உறவினர் நாகப்பா, சாரா கோவிந்து, ரகுநந்தன் ஆகியோரும்கடத்தப்பட்டனர்.
இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் கேசட்டோடு, பர்வதம்மா பெங்களூர் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள்மற்றும் எனக்கு தகவலைத் தெரியப்படுத்தினார் என்றார் முதல்வர் கிருஷ்ணா.
செய்தியாளர்களிடம் பேசிய பிறகு முதல்வர் கிருஷ்ணாவும், காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும்தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க சென்னை விரைந்தனர்.
ராஜ்குமார் கடத்தலால், கர்நாடகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதச் சம்பவம் ஏதும் நடந்து விடாதபதி போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications