400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

Subscribe to Oneindia Tamil

ஸ்தம்பித்துப் போன பெங்களூர்

பெங்களூர்:

சந்தன வீரப்பனால் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து கர்நாடகம் ஸ்தம்பித்துப்போயுள்ளது. குறிப்பாக சாப்ட்வேர் நகரமான பெங்களூர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வன்முறையையடுத்து நகர் முழுவதும் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் ஆங்காங்கே வன்முறைக் கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஒருவர்கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பெங்களூரின் பல பகுதிகளிலும் சாலைகளில் டயர்கள் குவிக்கப்பட்டுஎரிக்கப்பட்டன.

சென்னை-பெங்களூர் இடையிலான பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கமாட்சிபாளையாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரி தீ வைத்து எரிக்கப்பட்டது. ஜே.பி நகர் ராகிகுடாஆஞ்சநேயர் கோவில் அருகே தமிழக பதிவு எண் கொண்ட புதிய வேன் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மாகடி ரோட்டில் டெம்போ டிராவலர் ஒன்றும் எரிக்கப்பட்டது. பசவேஸ்ேவர நகர், ராஜாஜி நகர் பகுதிகளில் பெரும்கலவர சூழ்நிலை நிலவுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. அங்கு அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

தமிழகத்திலிருந்து எந்த பஸ்சும் கர்நாடகத்துக்குள் நுழைய முடியவில்லை. ஒசூர் வரை மட்டுமே அவைஇயக்கப்படுகின்றன. ஒசூர் அருகே அத்திபெலேயில் இருந்து பெங்களூருக்குள் வர தனியார் வேன்கள் மட்டுமேஒரே வழி. ஆனால், இந்த வேன்களும் நகரின் எல்லா பகுதிகளுக்குள்ளும் செல்ல முடியவில்லை.

அவை டெய்ரி சர்க்கிள் பகுதியோடு திருப்பிவிடப்பட்டு விடுகின்றன. திங்கள்கிழமை அதிக அளவில்ஆட்டோக்கள் இயங்கின. ஆனால், அவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பதையடுத்து செவ்வாய்க்கிழமைஆட்டோக்களும் கூட மிகக் குறைந்த அளவில் தான் இயங்கின.

நகரில் பஸ்கள் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாகவிடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் இயங்கவில்லை. வங்கிகளும் முழுமையாக இயங்கவில்லை.

பெட்ரோல் பங்குகளில் கூட்டம் மொய்த்தது. இதைடுத்து பல இடங்களில் பெட்ரோலின் விலையும் திடீரெனஉயர்த்தப்பட்டது.

தமிழ் பத்திரிக்கை அலுலகங்கள் மட்டுமின்றி சன் டிவியின் கன்னட சேனலான உதயா டிவியும் தாக்கப்பட்டது.சாலைகள் முழுவதும் எரிந்து போன டயர்கள், கற்கள்- பாறைகள், சிதறிக் கிடக்கும் கார்களின் கண்ணாடிகள் எனஅச்சமூட்டும் வகையில் உள்ளன.

தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் கர்நாடகத்துக்குள் நுழைய முடியாமல் பல கி.மீ.தூரத்துக்கு ஒசூர் அருகே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

பெங்களூர் தவிர்த்து மணடியா, மைசூர், சாம்ராஜ்நகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலைநிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+