400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

Subscribe to Oneindia Tamil

ரத்த வாடை வீசும் வீரப்பனின் வரலாறு

சந்தனக் கடத்தல் வீரப்பன். இப்போது அனைத்துத் தரப்பு மக்களாலும் உச்சரிக்கப்படும்பெயர். சாதாரண பாமரன் முதல் பிரதமர் வரை வீரப்பனின் கேவலமான புகழ்இப்போது பரவியுள்ளது.

பள்ளிக்கூட வாசனையை அறியாத வீரப்பனுக்கு காடுதான் ஒரே புகலிடம். ஈரோடு,சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அந்தியூர் வனப்பகுதிதான் தனது எதிர்காலதலைமறைவு வாழ்க்கைக்கு வீடாக இருக்கும் என்பதை அப்போது அவன்அறியவில்லை.

இருந்தும், அந்த காடு அவனுக்குப் பிடித்து விட்டது. எப்போதெல்லாம் நேரம்கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காட்டுக்குள் சென்று காட்டின் வளம்- செழிப்பு, வனவிலங்குகளின் வாழ்க்கையை கண்டு களித்தான்.

அப்போது கண் குளிர, மனம் சந்தோஷப்பட எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்வன வளங்களைக் கண்டுகளித்த வீரப்பன் பின் நாளில் அந்த வளங்களையே (சந்தனம்மரங்கள், யானைத் தந்தங்கள்) சூறையாடி விற்க ஆரம்பித்தான்.

துவக்க காலத்தில் வீரப்பன் யார் என்பது வெளி உலகுக்குக் தெரியாமல் இருந்தது.ஆனால், காட்டுக்குள் சென்று காட்டு வளத்தைச் சுரண்ட ஆரம்பித்து, அந்த சுரண்டலைமறைக்க காட்டுக்கு அருகில் வசிக்கும் கிராமப் பகுதி மக்களுக்கு சில உதவிகளைச்செய்தான்.

தர்மம் தலைகாக்கும் என்பதற்கு வீரப்பன் செய்த உதவி (தர்மம்) அவனுக்கு அப்போதுமட்டுமல்ல இப்போதும் உதவி வருகிறது.

வீரப்பனின் உயிருக்குக் காவலாக இருந்து வருவது கிராமத்தினருக்கு அவன் செய்துவரும் உதவிதான். நாட்டின் வளத்தைச் சுரண்டி உதவி செய்வது குற்றம் என்றாலும்உதவும் மனப்பான்மையை அவன் பெற்றிருந்ததுதான் சிறப்பு.

சந்தன மரங்களை மட்டுமின்றி யானைகளையும் கொன்று குவித்து தந்தங்களை வெட்டிவிற்க ஆரம்பித்தான். உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் எனபலரையும் தனது ஆயுத பலத்தாலும், பண பலத்தாலும் கைக்குள் போட்டுக்கொண்டான்.

அவனது நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டியவர்களே அவனைக் கண்டிக்காமல்அவனது கடத்தல் தொழிலுக்கு உதவியாக இருந்தது அவனுக்கு மிகவும் உதவியாகப்போய்விட்டது.

ஒரு வழியாய் அந்தியூர் காட்டுப் பகுதி முழுமையாகவே வீரப்பன் கைக்குள் வந்தது.1984-க்குப் பிறகுதான் வீரப்பன் என்ற கடத்தல்காரன் அந்தியூர் வனப்பகுதியில்இருக்கிறான். சந்தன மரங்களை வெட்டி கடத்துகிறான், யானைகளைக் கொன்றுதந்தங்களை வெட்டி எடுக்கிறான் என்ற செய்தி வெளி உலகுக்கு தெரிந்தது.

இதுவரை ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள சந்தன மரங்களையும்,நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள தந்தங்களையும் அவன் வெட்டிக் கடத்தியுள்ளான்.எதிர்த்த 100-க்கும் மேற்பட்டவர்களை அவன் கொன்றுள்ளான். வீரப்பனின் தந்தவேட்டைக்குப் இதுவரை 2,000 யானைகள் பலியாகியுள்ளன.

வீரப்பனின் கொலைப் பட்டியலில் வனப் பகுதியில் விறகு பொறுக்கும் சாமானியர்கள்முதல் போலீஸார், வன இலாகா அதிகாரிகள் என அனைவரும் அடங்குவர்.

1984 முதல் 86 வரை அவனது கடத்தல் பணி முழு வீச்சில் அனைவரது ஏகோபித்தஆதரவுடனும் நடைபெற்று வந்தது. பொருள்கள் கடத்தல் என்று தொடங்கி பின்னர்ஆள் கடத்தல் என்ற அளவுக்கு வளர்ந்தான் வீரப்பன்.

கடந்த 13 ஆண்டுகளாக அவன் நடத்தி வரும் ராஜ்யத்தில் கடைசி சம்பவம் தான்கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் கடத்தல். இடைப்பட்ட காலத்தில் அவனதுவாழ்க்கைச் சரித்திரத்தின் சில நாள் குறிப்புகள் இங்கே:

1987 - சந்தியமங்கலம் வன இலாகா அதிகாரி சிதம்பரம் சுட்டுக் கொலை.

1988 - சத்தியமங்கலம் வனப் பகுதியில் புளியங்கோம்பையில் வனத்துறைஊழியர்கள் இருவர் கொலை.

1989 - வீரப்பனின் கடத்தல் லாரியை தடுத்து நிறுத்திய வன இலாகா அதிகாரி மோகன்சுட்டுக் கொலை.

1989 - மற்றொரு கும்பலுடன் வீரப்பன் கும்பல் சண்டை - எதிர் கும்பலில் 5 பேர்சுட்டுக் கொலை.

1989 - வீரப்பனைப் பிடிக்க தற்போது தமிழக டிஜிபியாக உள்ள எப்.சி. ஷர்மாதலைமையில் சிறப்பு அதிரடிப் படை அமைப்பு.

1989 - சேலம் மாவட்ட பாலாறு மற்றும் பேகூல் 4 வன அதிகாரிகள் சுட்டுக் கொலை.

1990 - சிறுவியகல் பகுதியில் வீரப்பன் மறைத்து வைத்திருந்த சந்தனக் கட்டைகளுக்குபோலீஸார் தீ வைத்தனர். இதற்கு வீரப்பன் நடத்திய பதிலடியில் சப்-இன்ஸ்பெக்டர்கொலை.

1990 - ஒகேனக்கல் அருகே 4 போலீஸார் சுட்டுக் கொலை.

1990 - வீரப்பனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்தால் சன்மானம் அளிப்பதாகதமிழக, கர்நாடக அரசுகள் அறிவிப்பு.

1990 - வீரப்பன் கும்பலைச் சேர்ந்த 100 பேர் கைது.

1991 - போலீஸ் இன்ஃபார்மர் சுட்டுக் கொலை.

1991 - கர்நாடக சிறப்பு அதிரடிப் படையின் துணைத் தலைவர் பி. சீனிவாஸ் கொடூரக்கொலை.

1992 - கர்நாடக கல்குவாரி உமையாளர் மகன் கடத்தல். ரூ. 15 லட்சம் பிணைத்தொகைக்கு மகன் விடுதலை.

1992 - மைசூர் மாவட்டம் ராமாபூர் போலீஸ் நிலையம் எரிப்பு. சப்-இன்ஸ்பெக்டர்உள்பட 5 பேர் சுட்டுக் கொலை.

1992 - மைசூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணா உள்பட 6 பேர்சுட்டுக் கொலை.

1993 - பாலாறு அருகே காக்கேமடுவு என்ற இடத்தில் வீரப்பனின் கண்ணி வெடியில்சிக்கி 7 போலீஸார் உள்பட 22 பேர் பலி.

1993 - மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் சுட்டு 6 பேர் சாவு. பதில்தாக்குதலில் வீரப்பன் கும்பலில் 6 பேர் சாவு.

1993 - போலீஸுக்குத் தகவல் சொன்ன 8 பேர் வெட்டிக் கொலை. அதிரடிப் படைநடவடிக்கை தீவிரம்.

1993 - தனித்தனி சம்பவங்களில் வீரப்பன் கும்பலில் 11 பேர் சுட்டுக் கொலை.

1993 - வீரப்பனைப் பிடிக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர்ஈடுபடுத்தப்பட்டனர்.

1994 - கடலாறு என்ற இடத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந் 5 பேர் சுட்டுக் கொலை.

1994 - தமிழக ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளர் சிதம்பரநாதன் உள்பட 7பேர் கடத்தல். கோவை மாவட்ட ஆட்சியருடன் வீரப்பன் பேச்சு தோல்வி. 27நாட்களுக்குப் பிறகு பிணைக் கைதிகள் அனைவரும் உயிருடன் தப்பினர்.

1995 - வீரப்பன் தம்பி அர்ஜுனன் உள்பட 3 பேர் போலீஸில் சரண். போலீஸ் காவலில்இருந்தபோது மூன்று பேரும் சயனைடு தின்று தற்கொலை.

1995 - தம்பி தற்கொலைக்கு வீரப்பன் பதிலடி. அந்தியூர் வனப் பகுதியில் 3 வனஇலாகா ஊழியர்கள் கடத்தல். ரூ. 5 கோடி கேட்டு வீரப்பன் மிரட்டல். ரூ.3.5 லட்சம்கொடுத்து அவர்கள் உயிருடன் மீட்பு.

1996 - வீரப்பனைப் பிடிக்கச் சென்ற போலீஸ் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதுதாக்குதல். அவரது இரு கை விரல்கள் துண்டிப்பு. ஒரு போலீஸ்காரர் கொலை.

1997 - சரணடைய விரும்புவதாக நக்கீரன் பத்திரிகை மூலம் வீரப்பன் தகவல்.

1997 - மைசூர் வனப்பகுதியிலிருந்து 10 பேர் கடத்தல். விடுவிக்கப்பட்ட ஒருவர்மூலம் சரண் திட்டத்தை வீரப்பன் அறிவித்தான்.

1997 - வீரப்பன் கோரிக்கையை ஏற்பதாக தமிழக, கர்நாடக அரசுகள் அறிவிப்பு.

1997 - அரசுத் தூதராக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் சென்று வீரப்பனைச்சந்தித்தார்.

1997 - வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்க இரு மாநில அரசுகளும் மறுப்பு. சரண்திட்டத்தில் சிக்கல்.

1997 - கோபாலுடன் மற்றொரு பிணைக் கைதி ராஜு விடுவிப்பு.

1997 - ரூ. 5 கோடி கேட்டு வீரப்பன் மிரட்டல். பிணைக் கைதிகளை விடுவிக்கும்படிவீரப்பனுக்கு கோபால் கடிதம்.

1997 - பிணைக் கைதிகளை விடுவிக்க வீரப்பன் ஒப்புதல். சரணடைவதாக கோபால்மூலம் அரசுகளுக்குத் தகவல்.

1997 - வீரப்பன் சரணடைய இரு மாநில அரசுகளும் ஒப்புதல். ஆனால், அவனது சிலகோரிக்கைகளை ஏற்க மறுப்பு.

1997 - வீரப்பனைச் சந்திக்க மீண்டும் சென்றார் கோபால். பிணைக் கைதிகள் 8பேரையும் அழைத்து வந்து முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைத்தார் கோபால்.

1997 - வீரப்பனின் கோரிக்கைகளை ஏற்க இரு மாநில முதல்வர்களும் திட்டவட்டமாகஅறிவிப்பு.

1997 - கர்நாடக மாநலம் பந்திபூர் வன விலங்கு சரணாலயத்திலிருந்து 23 பேர்கடத்தல். சில மணி நேரத்தில் 17 பேர் விடுதலை. பறவையியல் விஞ்ஞானி உள்பட 6பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைப்பு.

1997 - 6 பேரும் விடுதலை. சரணடைய விரும்புதாக கேஸட் மூலம் வீரப்பன் தகவல்.அக்டோபர் 31-க்குள் சரணடையும்படி தமிழக அரசு கெடு. நக்கீரன் கோபாலுக்குசரணடைவதாக வீரப்பன் கடிதம்.

1998 - வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம் சரண்.

1998 - சரணடைய வீரப்பன் தயக்கம். கைது செய்யப்பட்ட தனது கூட்டாளிகளைவிடுவிக்க வீரப்பன் கோரிக்கை.

1998 - இப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள அப்போதையஅதிரடிப் படை ஐஜி காளித்து தலைமையில் அதிரடிப் படை தீவிர வேட்டை.

1999 - தர்மபுரி அருகே வன இலாகா ஊழியர்கள் 3 பேர் கடத்தல். பின்னர் பிணைக்கைதிகள் விடுதலை.

1999 - வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி ஜூனியர் வீரப்பன் சுட்டுக் கொலை.

2000 - பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் கடத்தல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+