400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நாஞ்சிலார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
சென்னை:
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் கி. மனோகரனின் மறைவுக்கு பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய்:
நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாஞ்சில்மனோகரன் நாடாளுமன்றத்தில் நீண்ட நாள் என்னுடன் சேர்ந்து செயல்பட்டவர். சிறந்த நாடாளுமன்றவாதி. அவரது மறைவால் வாடும் திமுகதலைவர் கருணாநிதிக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் பாத்திமா பீவி:
நாஞ்சில் மனோகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. சிறந்த நாடாளுமன்றவாதி.
அமைச்சர் க. அன்பழகன்:
நாஞ்சில் மனோகரன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அனைவரிடமும் அன்பாகப் பேசி அவர்களின் அன்பைப் பெற்றவர். மற்ற கட்சியினரிடமும்நட்புடன் உறவாடி அவர்களின் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார்.
இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகி அனைத்துக் கட்சி தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பை வைத்துக் கொண்டார்.
தனது இனிய குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்தவர். திமுகழகத்தின் முன்னணி தலைவராகவும், பெருந் தூணாகவும் விளங்கியவர். அவரது மறைவுதிமுகவுக்குப் பெரிய இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ:
திராவிட இயக்கத்துக்கு நாஞ்சில் நாடு தந்த மணி விளக்கு அணைந்துவிட்டது. தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு சிறந்த சொற்பொழிவாளராகவிளங்கியவர். அனைத்துக் கட்சித் தலைவர்களின் நன் மதிப்பைப் பெற்றவர். நட்புக்கு இலக்கணமானவர்.
அவரது மறைவு திமுகவுக்கும், தமிழகத்துக்கும் பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications