400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
வீரப்பனிடம் தூது செல்ல முன் வரும் முன்னாள் பிணைக் கைதி
கோவை:
வீரப்பனிடம் ஒரு மாதம் பணயக் கைதியாக இருந்தவர் தூது செல்லத் தயார் எனஅறிவித்துள்ளார்.
கோவையை அடுத்துள்ள நரசிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர்ராஜூ.இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வான். பணயக்கைதிகளால் நடக்க முடியவில்லையென்றால், அவர்களை அவனதுஆட்களைக்கொண்டு சுமந்து வரும்படி கூறுவான். அவனது உத்தரவுப் படி அவனது ஆட்கள்பணயக் கைதிகளைத் தூக்கி செல்வதுண்டு.
பொதுவாக தனக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடத்தல்நாடகத்தை அரங்கேற்றுவான். மழைக் காலங்களில் மழை வந்தால் பிளாஸ்டிக்பைகளைக் கொண்டு கூடாரம் அமைத்து தங்குவான்.
பணயக் கைதிகள் தப்பால் இருக்க, காவலாளிகளை போலீஸ் உடையில் இருக்கவைப்பான். அவனிடம் ஒரு டேப்ரெக்கார்டர் டூ இன் ஒன் உண்டு. இதில் தவறாமல்பி.பி.சி செய்தி கேட்பான். காலை மாலை இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிட்டுபழகிய வீரப்பன், தனது கைதிகளுக்கும் தான் உண்பதையே உணவாகக் கொடுப்பான்.
தற்போது வீரப்பனுக்கு பணத் தேவை இல்லை. அவன் கோரிக்கை வைத்தால் பொதுமன்னிப்பு வழங்கத்தான் கூறுவான். ஒரு மாதம் அவனுடன் தங்கியிருந்ததால்,அவனைப் பற்றியும் அவனது கூட்டாளிகளைப் பற்றியும் நன்கு தெரியும்.
எனவே, அரசு என்னை தூதுவராக செல்ல அழைத்தால் செல்லத் தயாராகஇருக்கிறேன். வீரப்பனிடம் தூது செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 94ம் ஆண்டு போலீஸ் டி.எஸ்.பி.,சிதம்பரநாதன், ஏட்டு ராஜகோபால்ஆகியோர் கடத்தப்பட்டபோது சேகர் ராஜூவும் கடத்தப்பட்டார். இவர் தற்போதுஆசிரியராக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பணியாற்றி வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications