400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மரணம்: புதன்கிழமை உடல் தகனம்
சென்னை:
மாரடைப்பால் காலமான தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் கி.மனோகரனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்படகிறது.
ஓட்டேரியில் உள்ள சுடுகாட்டில் காலை 9 மணிக்கு நாஞ்சிலாரின் உடல் தகனம்செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது நாஞ்சில் மனோகரனுக்கு திடீர்நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் இறந்தார்.
புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோகரனின்உடல் வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில்மனோகரன் வீட்டுக்குச் சென்ற தல்வர் கருணாநதி, மனோகரன் உடல் மீதுமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்ட அனைத்துஅமைச்சர்களும், மேயர் .க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகநிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நடிகர்கள், நடிகைகள், பிற கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோரும் மனோகரன் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்குஅஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மறைந்த தலைவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர். அமைச்சர் மறைவையொட்டி, அவரது வீடு இருக்கும் புரசைவாக்கம்,ஓட்டேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுறை அறிவிக்கப்பட்டது.
அமைச்சரின் தம்பி மஸ்கட்டில் உள்ளார். அவருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்ததும் புதன்கிழமை காலை நாஞ்சிலாரின் உடல்தகனம் செய்யப்படும்.
தி.மு.க. 3 நாள் துக்கம்:
நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 3 நாள்துக்கம் கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 1,2,3 தேதிகளில் திமுக கொடிகள் அனைத்தும்அரைக் கம்பத்தில் பறக்கும்.
இந்த மூன்று நிாட்களில் எந்த கழக நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும்,ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து:
நாஞ்சில் மனோகரன் மறைவை அடுத்து கோவை, சேலம் மாவட்டங்களில்முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.
அமைச்சர் நாஞ்சிலார் மறைந்ததை அடுத்து அரசு அலுவகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அரைநாள் விடுறை அறிவிக்கப்பட்டது. அரசுஅலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications