400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மரணம்
சென்னை:
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் கி. மனோகரன் மாரடைப்பால்செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
மனோகரனுக்கு மனைவி இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். நாஞ்சில்மனோகரன் மறைவு கேட்டு முதல்வர் கருணாநிதி உள்பட பல அரசியல் தலைவர்கள்ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் மனோகரனின் உடல் மக்கள் அஞ்சலிக்குவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி உள்பட பிற அமைச்சரவைச் சகாக்களும்,அரசியல் தலைவர்களும் மனோகரன் வீட்டுக்குச் சென்று அவரது சடலத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள நாகர்கோயிலில் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம்தேதி பிறந்தவர் மனோகரன். நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் நாகர்கோயிலில்பிறந்ததால் நாஞ்சில் என்ற அடைமொழி சேர்த்து நாஞ்சில் மனோகரன் என்றுஅழைக்கப்பட்டார்.
துவக்க காலத்தில் திமுகவில் தீவிர உறுப்பினராக இருந்த இவர், பின்னர் எம்.ஜி.ஆர்.அதிமுகவைத் தொடங்கியபோது அக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்துவிலகி மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
1962-67, 67-71, 71-76 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 77-80 வரைஅமைச்சராகவும், 85-88 வரை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் 89-91மற்றும் 96 முதல் வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார்.
தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு திங்கள்கிழமைதான் அவர் வீடுதிரும்பினார். திங்கள்கிழமை இரவு திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.உடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு, செவ்வாய்க்கிழமைஅதிகாலை இறந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications