400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
இது ஆபத்தான சந்திப்பாக இருக்கும் என்கிறார் நக்கீரன் கோபால்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க செல்லஇருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்திருந்த ராஜ்குமாரையும்அவரது உறவினர், மானேஜர், மருமகன் ஆகியோரையும் சந்தனக் கடத்தல் வீரப்பன் துப்பாக்கி முனையில்ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் சென்றான்.
ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் ஒரு கேஸட் கொடுத்து அதை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கும்படி வீரப்பன் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
அந்த கேஸட்டில் 8 நாட்களுக்கு தன்னைச் சந்திக்க ஒரு தூதரை அனுப்பும்படி வீரப்பன் கூறியிருந்தான்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழக முதல்வர், கருணாநிதியும் சந்தித்துப் பேசினர்.வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபாலை மீண்டும் அனுப்பலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து நக்கீரன் கோபாலிடம் முதல்வர் கருணாநிதி பேசினார். கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்றுவீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி செவ்வாய்க்கிழமை அவர் காட்டுக்கு செல்ல இருந்தார். ஆனால், பெரம்பலூரில் நக்கீரன் நிருபர் ஒருவர்கொலை செய்யப்பட்டதையடுத்து புதன்கிழமை அல்லது அதற்குப் பின் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால்செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் சார்பில் அரசுத் தூதராக நக்கீரன் கோபால் செல்கிறார்.
வீரப்பனைச் சந்திக்கும் முன் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாக கோபால் கூறினார். பலமுறைஉயிரைப் பணயம் வைத்து வீரப்பனைச் சந்தித்திருக்கிறேன். வீரப்பனிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவித்துவந்துள்ளேன்.
ஆனால், இந்த முறை செல்வது ஆபத்தானதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆகவே இரு மாநிலஅரசுகளிடமிருந்து சில உறுதிமொழிகளை எதிர்பார்க்கிறேன். அது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேசுவேன்.
இப்போது நான் மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமாக முடியும் என்று கருதுகிறேன். தற்போது வீரப்பன்இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. நான் கடைசியாக வீரப்பனைச் சந்தித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.வீரப்பனிடமிருந்து வரும் தகவலைப் பொறுத்துத்தான் காட்டுக்குள் செல்ல முடியும்.
என்னுடன் எனது அலுவலக நண்பர்கள் சிவசுப்பிரமணியம், சுப்பு, பாலு ஆகியோரும் வீரப்பனைச் சந்திக்கவருகின்றனர் என்றார் கோபால்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications