400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
400 கிராமங்களில் கள்ளச்சாராயத்தை ஒழித்த போலீஸ்
சென்னை:
தமிழகத்தில் 400 கிராமங்களில் கள்ளச்சாராயம் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது என்றுதமிழக மதுவிலக்குப் போலீஸ் ஐஜி ஆர். நடராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கள்ளச்சாராயம் பற்றி போலீஸாருக்குத் தகவல் கொடுப்பதற்காக பொதுமக்களுக்கு இலவசதொலைபேசி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
1600334533 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு கள்ளச்சாராயம் பற்றியதகவல்களைப் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
தகவல் தெரிவிப்பவர் தனது முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டிய அவசியம்இல்லை. அப்படி அவர் விவரம் கொடுத்தால் அவை ரகசியமாக வைக்கப்படும்.
இலவச தொலைபேசியில் வரும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக 3 வாகனங்கள் 24 மணி நேரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த இலவச தொலைபேசி வசதி விரைவில்அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும்நடவடிக்கையில் மதுவிலக்குப் பிரிவுப் போலீஸார் தீவிர நிடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பலனாக 400கிராமங்களில் கள்ளச்சாராயம் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது.
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இச் சாதனையைப் புரியமுடிந்தது. ஒரு காலத்தில்கள்ளச்சாராயம் அதிகமாக இருந்த நெல்லை மாவட்டத்தில் மறுகால்குறிச்சி, மதுரைமாவட்டத்தில் காளப்பன்பட்டி, சென்னை அருகே மீஞ்சூர், நாசரேத் பேட்டை, ஆரிக்கமேடுபோன்ற கிராமங்களில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
கள்ளச்சாராய வழக்கில் கடந்த ஆண்டு 1419 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 768 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 2.42 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 52ஆயிரம் பேர் பெண்கள். 27 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயமும், 50 லட்சம் லிட்டர் சாராயஊறலும் 4 லட்சம் லிட்டர் எரிசாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மதுவிலக்குப் போலீஸாருக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இன்டர்நெட் மூலம் இதுவரை 158 புகார்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும்கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் நடராஜ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications