இந்த வாரம்

Subscribe to Oneindia Tamil

பாரதீய ஜனதா தலைவராகிறார் பங்காரு லட்சுமணன்

டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக பங்காரு லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளார்.

பாரதீய ஜனதா, உயர் ஜாதிகள் ஆதரவுக் கட்சி என்ற எண்ணத்தை மாற்றும் விதமாக அக் கட்சியின் 20 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாகதலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

ஜனசங் காலத்திலிருந்தே பாரதீய ஜனதா கட்சிக்கு தலித் இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரோ தலைவராகஇருந்ததில்லை. (ஜன சங் என்பது பாரதீய ஜனதா கட்சியின் முந்தைய பெயர்)

பிரதமர் வாஜ்பாய், உள்துறை மந்திரி எல்,கே. அத்வானி இருவரின் தீவிரஆலோசனைக்குப் பின் தற்போது மத்திய ரயிலவே இணை அமைச்சராக உள்ளபங்காரு லட்சுமணனை புதிய தலைவராக நியமிப்பது என முடிவெடுத்தனர்.

பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவரான குஷாபாவ் தாக்கரேயின் பதவிக் காலம் இந்த வருடம்ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதிமுடிவடைகிறது. இவருக்கு அடுத்தப்டியாக தலைவராக பங்காரு லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

61 வயதாகும் பங்காரு லட்சுமணன் நாக்பூரில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தலைவராகபதவியேற்பார். லட்சுமணன் மூன்று வருடம் கட்சித் தலைவராக இருப்பார்.

பங்காரு லட்சுமணன் 1939-ம வருடம் மார்ச் மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர். தமது 12-வது வயதில் ராஷ்டிரிய சுயம் சேவக்சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்தார்.

லட்சுமணன் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக 1996-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இருந்து வருகிறார். புதிய பொறுப்பை ஏற்கவிருப்பதைத்தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் லட்சுமண் என்று தெரிகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+