வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
கேஸட்டில் வீரப்பன் கடும் மிரட்டல்
சென்னை:
ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மாவிடம் கொடுத்தனுப்பிய கேசட்டில் வீரப்பன் மிகவும் மிரட்டல்விடும் பாணியில் பேசியிருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்த கேஸட்டில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை அரசு வெளியிடவில்லை. இப்போது தான்அதில் கூறப்பட்டுள்ள விவரம் வெளியாகியுள்ளது.
தன்னை பிடிக்க முயன்றாலோ, அல்லது தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினாலோ மிகக்கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார் வீரப்பன்.
கேஸட்டில் வீரப்பன் கூறியிருப்பதாவது:
ராஜ்குமாரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தேன். மிகவும் திட்டமிட்டுத்தான் அவரைக்கடத்தியுள்ளேன். ராஜ்குமாரும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவும் உறவினர்கள் என்பதும் எனக்குத்தெரியும்.
பாவம் பார்த்து யாரையும் நான் விடுவிக்க மாட்டேன். எனது கோரிக்கைகளை சொல்லிஅனுப்புவேன். அதை நிறைவேற்ற வேண்டும்.
நான் சோர்ந்து போயுள்ளேன். யாரையும் கொல்லமாட்டேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. அப்போது நான் தனி மனிதன். அதனால் தான் சரணடையவாய்ப்பு கேட்டு உங்களிடம் வந்தேன். பிணைக் கைதிகளையும் விடுவித்தேன். ஆனால், இப்போது நிலைமைமாறிவிட்டது. நான் மிகுந்த பலத்துடன் உள்ளேன்.
எனது தம்பியும் 5 கூட்டாளிகளும் தமிழக போலீசிடம் சரணடைந்தனர். அவர்களை தமிழக அரசுகாவலில் வைத்திருந்தது. ஆனால், கர்நாடக முதல்வராக இருந்த தேவ கெளடா அவர்களை தனதுமாநிலத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகளுடன் சேர்ந்து விஷம் வைத்துக் கொன்றார்.
கடந்த முறை நான் பொது மன்னிப்பு கேட்டு ஆட்களை கடத்தியபோது அப்போதை முதல்வர் படேல்,டெல்லிக்கு சென்று ராணுவ டாங்கிகளையும் விமானங்களையும் கேட்டார். நீங்கள் ஏவுகணைமட்டுமல்ல, அணு குண்டு கொண்டு வந்தால் கூட இந்த முறை நான் அஞ்ச மாட்டேன்.
ஒரு இன்ச் கூட நான் இறங்கி வர மாட்டேன். நான் நீங்கள் நினைப்பது போல அல்ல. இதை நான் ஏன்சொல்கிறேன் என்றால், கடந்த முறை நான் பயத்தினாலோ அல்லது பாவப்பட்டோ 6 பேரையும்விடுதலை செய்தேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது.
எனக்கு சில திட்டங்கள் உள்ளன. எப்போது எதை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனதுகோரிக்கைகளை ஏற்று தூதரை அனுப்பினால், பிணைக் கைதிகள் பத்திரமாக திரும்புவர்.
இவ்வாறு கேஸட்டில் வீரப்பன் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications