இந்த வாரம்
இந்தியா-பாக் இடையே அணு ஆயுதப் போர் வரும்...எச்சரிக்கிறது ரஷ்யா
மாஸ்கோ:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத யுத்தம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன என்றுரஷ்யாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்தேரி கோகோஷின் தெரிவித்துள்ளார்.
போரிஸ் எல்ட்சின் அதிபராக இருந்த போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் அந்தேரி. இவர் தற்போது சர்வதேச பாதுகாப்புக் கழகத்தின்இயக்குநராக இருக்கிறார்.
ஆசியாவின் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையொன்றில் அவர் எழுதியுள்ளதாவது:
தெற்காசிய நாடுகளில் அணு ஆயுத யுத்தம் வருவதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. 1998 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணுகுண்டு வெடித்துசோதனைகள் நடத்தின. இந்த நிலையில் சீனா ஆயுதங்களைக் குவித்து வருகின்றது.
அமெரிக்கா "ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது. இதனால் இந்தியாவும், சீனாவும் அணஆயுதங்களைக் குவிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றன.
சீனா, அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது இருக்கும் அணு ஆயுதங்களை விட 5 முதல் 6 மடங்கு அதிகமாக அணு ஆயுதங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள்உள்ளது. அதனால் அடுத்த வல்லரசு நாடாக சீனா மாறவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவிடமும் அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது இருப்பதை விட 7 அல்லது 8 மடங்கு அணு ஆயுதங்கள் இருக்கும்.
அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை திட்டத்தை முறியடிக்கும் வகையில் சீனாவும், அதைத் தொடர்ந்து இந்தியாவும் ஈடுபடும்.
மேலும், ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் படைகளுக்கும் இடையே சண்டை மூளும் அபாயமும் உள்ளன. பாகிஸ்தானும் இந்தியாவுக்குமிகப்பெரிய ஆபத்தைக் கொடுக்கும்.
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் கோகோஷின்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications