இந்த வாரம்
மிசோரத்தில் அனுமதியின்றி நுழைந்த 100 பர்மியர்கள் கைது
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் அனுமதியில்லாமல் நுழைந்தது தொடர்பாகவும், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும்பல்வேறு குற்றங்கள் புரிந்தது தொடர்பாகவும் 100 க்கும் மேற்பட்ட பர்மா நாட்டுக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
மிசோரம் காவல்துறை அமைச்சர் தான்லூயா அய்சாலில் இதுகுறித்துக் கூறுகையில், மிசோரத்தில் பர்மா நாட்டுக் காரர்கள் அனுமதியில்லாமல்நுழைவது அதிகரித்து வருகிறது. போரஸ் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக அவர்கள் இங்கு வந்து விடுகிறார்கள்.
அவர்களை பர்மாவுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இங்கு அனுமதியில்லாமல் நுழையும் இவர்கள் பெரும்பாலும்போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வேறு பல குற்றங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வாரத்தில் பர்மா நாட்டைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டு அய்சால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அனுமதியில்லாமல் நுழையும்பர்மாக்காரர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் நாட்டுக்கே அனுப்பும்படியும், அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும்போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பழங்குடி எம்எல்ஏ டுலூங்கால் கூறுகையில், பர்மாவிலிருந்து இங்கு வரும் மக்கள் மிசோரம் மக்களைப் போலவே தோற்றமளிக்கிறார்கள். மிசோமொழியையே அவர்கள் பேசுவதால் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
அய்சால் கல்லூரி மாணவர் பால் சைலோ கூறுகையில், மிசோரத்தில் நுழையும் இவர்கள் சயிகா, சம்பாய் மாவட்டங்களில் நுழைந்து விடுகிறார்கள்.போதைப் பொருட்களை இங்கு விற்பனை செய்வதால் மிசோரம் மக்கள் பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலம் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் 20 க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி.வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பர்மாவிலிருந்து வறுமை காரணமாக இங்கு வரும் மக்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறார்கள்.மிசோரத்தில் வாழ்ந்து வரும் இவர்கள் காலப்போக்கில் இங்கு வாழும் மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களில் பங்கு கேட்கும் அபாயமும்இருப்பதாக அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications