இந்த வாரம்
நிலாவுக்கு ராக்கெட் அனுப்புகிறது இந்தியா
டெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) நிலாவுக்கு ராக்கெட் அனுப்ப முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வசுந்தராஜே சிந்தியா புதன் கிழமையன்றுலோக்சபாவில் இத் தகவலை தெரிவித்தார்.
இத் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்: இந்திய விண்வெளி ஆராய்சிக்கழகம் ராக்கெட் அனுப்புவதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வுகளை முடித்துவிட்டது. ஆனால்அதற்கான செலவுத் திட்டம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
ஆரம்பக் கட்ட ஆய்வுகளில் அறிவியல் பூர்வமான சாத்தியக்கூறுகள், ராக்கெட்டைஇந்தியாவிலிருந்து ஏவுவதற்கா வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த முயற்சி விண்வெளித்துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும்என்றும்,ஐ.எஸ்.ஆர்,ஓ. இந்த விஷயம் குறித்து இதுவரை எந்த நாட்டின் உதவியையும் நாடவில்லை எனவும்அமைச்சர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications