இந்த வாரம்

Subscribe to Oneindia Tamil

அரசியல் கட்சிகளாய் உருமாறும் ஜாதிச் சங்கங்கள்

அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட, அரசியல்கட்சிகளை விட ஜாதிச் சங்கங்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றன. இதற்காகபல ஜாதிச் சங்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறி வருகின்றன.

ஜாதி, மத, இன வேறுபாடுகளையெல்லாம் கடந்து அரசியலில் ஒன்று பட்டதொண்டர்கள் ஒரே கட்சியில் இடம்பெற்று வந்தது பழங்கதையாகிவிட்டது. கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னர் வன்னியர்கள் ஒன்றாக செயல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சிஎன்ற தனிக் கட்சியைத் தொடங்கினர்.

இந்தக் கட்சியும், கூட்டணியில் சேர்ந்து ஓரிரு இடங்களைப் பிடித்து அமைச்சர் பதவிவரை பெற்று விட்டது. மக்கள் மத்தியில் ஜாதிக் கட்சி என்ற முத்திரையைக் கூடமறைத்து விட்டது.

அகில இந்திய அளவில், மதவாதக் கட்சி என பாரதிய ஜனதாவிற்கு முத்திரைகுத்தப்பட்டு விட்டாலும், அக்கட்சியுடன் பிற கட்சிகளும் நட்புக் கொண்டன.அக்கட்சியில் பல மதத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால், இப்போது ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி என்ற நிலை தமிழகத்தில் உருவாகிவருகிறது.

தமிழகத்தில் ஜாதி, மத மோதல்களைத் தடுக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்டமுயற்சியால் பல இடங்களில் தற்போது ஜாதிக் கலவரங்கள் ஒடுக்கப்பட்டு விட்டனஎன்றே கூறலாம். தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாதிமத மோதல்களையடுத்து, மாவட்டங்களின் பெயர் முதல், போக்குவரத்து கழகங்கள்,தெருப் பெயர் வரை ஜாதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு விட்டன.

இந்த மாற்றத்திற்கு முன்பு, ஜாதித் தலைவர்களின் சிலைகள், மறைந்தவர்களின்பெயர்களில் மாவட்டங்களை உருவாக்குதல், போன்ற பல கோரிக்கைகளைமுன்வைத்து ஜாதிச் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின.

ஆனால், அனைத்து ஜாதிப் பெயர்களும் தடை செய்யப்பட்ட பிறகு,போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் வழி இல்லாமல் போகவே, சங்கங்கள்எல்லாம் வாயடைத்துப் போயின. இவற்றின் பொதுவான கோரிக்கையெல்லாம் உயர்பதவிகளில் "தங்கள் ஆட்களை நியமிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

ஆனால், இந்த சூழ்நிலை மாறி தற்போது ஜாதிச் சங்கங்கள் மீண்டும் "கொடி உயர்த்தஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், இவை அனைத்தும்சுறுசுறுப்பாகவே செயல்படுகின்றன.

அரசியல் கட்சி தொடங்கி விட்டால், அடுத்து பெரும் கட்சிகளுடன் அமர்ந்து கூட்டணிபேச வசதியாக இருக்கும் என எண்ணத் தொடங்கி விட்டன.

சமீபத்தில் குடியாத்தாத்தில் முதலியார் பேரவை மாநாடு நடத்தியது. இதில் திரண்டமக்களைப் பார்த்து அசந்து போன ஜாதிச் சங்கத் தலைவர்களுக்கு அரசியல் கட்சியாகமாற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

எனவே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் முதலியார்கள்பேரவை சங்க நிறுவனர் ஏ.சி சண்முகம், விரிவாக ஒரு விளக்கத்தை அளித்தார். அதில்,அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் அமைப்புக்கூட்டம் நடத்தி, அதில் கட்சியின் பெயர், சின்னம் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், தற்போது எந்த தலைவர்கள் எந்த ஜாதி எனத் தெரியாமல் இருந்த நிலை மாறி,தற்போது தலைவர்களின் ஜாதியை சொல்லும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகிவருகிறது.

முதலியார் பேரவைத் தலைவர் சண்முகம் கூட, இந்தக் கணக்கை வெளியிட்டுள்ளார்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் இனத்தைச் சேர்ந்த 15 பேர்எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர், 10 பேர் அமைச்சராக இருந்தனர், ஆனால்இப்போது இரண்டே பேர் அமைச்சர்களாக உள்ளனர். இப்போது ஒரே ஒரு எம்.பி.தான் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு கோடி பேர் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் எனஅவர் குறிப்பிடத் தவறவில்லை. ( இது தமிழக மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும்மேலாகும்). ஜாதிச் சங்கத்தின் மூலம் ஓட்டு வங்கியை ஏற்படுத்தி, அதைப்பயன்படுத்தி, எளிதாகக் கூட்டணியில் இடம் பெற்று அமைச்சர் பதவியை அதிகரித்துக்கொள்ளலாம் என்பது இந்த பேரவையின் எண்ணமாக உள்ளது.

இதே போன்று, கோவை மாவட்டத்தில் பலம் பொருந்திய இரண்டு ஜாதிச் சங்கங்கள்அரசியல் கட்சியாக மாறத் திட்டமிட்டு வருகின்றன. இவை இரண்டுமே ஏற்கனவேஅரசியில் கட்சிகளாக மாறி, தோல்வியைத் தழுவியுள்ளன.

"திரவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்றப் பெயரில் கட்சி துவங்கி செயல்பட்டுவருகிறது. இதில் தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட,தமிழ்நாடு கம்மவார் மகாஜன சங்கத்தினர் ஒரு பகுதியினர் முடிவு செய்தனர்.

மற்றொரு கோஷ்டி, உடுமலையைச் சேர்ந்த கெங்குசாமி நாயுடு தலைமையில்,தங்களது பலத்தை அன்மையில் பரிசோதனை செய்து கொண்டது. கோவையில், கடந்தசில நாட்களுக்கு முன் "மாபெரும் உண்ணாவிரதத்தை நடத்தியது. இதில் பேசியதமிழ்நாடு கம்மவார் மகஜான சங்கத் தலைவர் கெங்குசாமி நாயுடு, "தங்களது 16அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், இச்சங்கம் கூடிய விரைவில்அரசியல் கட்சியாக மாறும் என அறிவித்துள்ளார். இதனால், இச் சங்கம் அரசியலில்ஈடுபடும் என்பது உறுதியாகி வருகிறது.

கொங்கு மண்டலம் எனப்படும், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர்,ஆகிய மாவட்டங்களில் கவுண்டர்கள் அதிக அளவில் உளளனர். இவர்களது ஜாதிச்சங்கம், 3 பிரிவாக செயல்பட்டு வருகிறது. கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவைத்தலைவர் கோவை செழியன், "தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத்துவங்கினார். ஆனால் சிறிது நாட்களில் இக் கட்சி முடிவுக்கு வந்து விட்டது.

கோவை செழியன் இறந்த பிறகு, 3 பிரிவுகளும் இணைந்து செயல்பட அடுத்த கட்டநடவடிக்கையில் இறங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் 16ம் தேதி திருப்பூரில் கூடிவிவாதிக்கவுள்ளது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும்அழைக்க முடிவு செய்துள்ளது.

இக்கூட்டத்திலேயே கொங்கு வேளாளாக் கவுண்டர்கள் பேரவை ஏற்கனவே முடிவுசெய்தது போல், "கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத்துவங்க முடிவு செய்துள்ளது. இப் பேரவையும் தனது பலத்தை நிரூபிக்க, திருப்பூரில்மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவேந்திரகுல வேளாளார்கள் என்ற ஜாதியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்துபின்னர் அதை புதிய தமிழகம் கட்சியாக மாற்றினார் டாக்டர் கருஷ்ணசாமி.பழங்குடியின மக்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வாகி விட்டார்.

எனவே, ஜாதியின் அடிப்படையில் கட்சி துவங்குவதை உடனடியாக தமிழக அரசுதடை விதிக்காவிட்டால், ஜாதி மோதல்கள் மாறிப் போய், அரசியல் கட்சிகளின்அடிதடிக் களமாக தமிழகம் மாறி விடும் என்பதில் ஐயமில்லை.

ஜாதி, மதம், இனத்தைக் கடந்து இன்டர்நெட்டில் காதலிக்கும் காலம் உருவாகி வரும்வேளையில் தமிழக அரசியல் களம் ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டுஆதிகாலத்துக்குப் பறந்து கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+