இந்த வாரம்
நக்கீரன் கோபால் வீரப்பனை இன்னும் சந்திக்கவில்லை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக காட்டுக்குள் சென்றுள்ள நக்கீரன் கோபால்,இன்னும் சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்கவில்லை என்று தெரிகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு அவரது சொந்தஊரான காஜனூரிலிருந்து வீரப்பன் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். அவரைபத்திரமாக மீட்பது தொடர்பாக வீரப்பனைச் சந்திக்க தமிழக, கர்நாடக அரசுகளின்சார்பில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார்.
சத்தியமங்கலத்திற்குட்பட்ட அந்தியூர் காட்டுக்குள் வீரப்பன் ஒளிந்திருப்பதாகத்தெரிகிறது. வீரப்பனைச் சந்திப்பதற்காக கோபாலும், மேலும் இரண்டு பேரும் அந்தியூர்காட்டுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தற்போது பத்துகிலோ மீட்டர் தூரம் வரை சென்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு வீரப்பனே வந்து கோபாலைஅழைத்துச் செல்லலாம் என்று தெரிகிறது. மேலும் நீண்ட தூரத்திற்கு வீரப்பன் கும்பல்சென்றிருக்க முடியாது என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 20 கிலோமீட்டர்சுற்றளவிற்குள்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
நடிகர் ராஜ்குமார் நிலை குறித்துத் தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்தும்தெரியவில்லை.
புதன்கிழமை மாலைக்குள் அல்லது வியாழக்கிழமை காலைதான் வீரப்பனும்,கோபாலும் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகுதான்இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரிய வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications