இந்த வாரம்
சென்னை செல்கிறார் கர்நாடக போலீஸ் ஐ.ஜி.
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை மீட்பது குறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளுடன்பேச கர்நாடக மாநில போலீஸ் ஐஜி சீனிவாசன் சென்னை விரைகிறார்.
இத் தகவலை தமிழக உள்துறைச் செயலர் சாந்த ஷீலா நாயர், சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். இது தொடர்பாக கர்நாடக, தமிழகஅரசுகள் தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளன.
இப் பிரச்சினை தொடர்பாக தமிழக உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
தற்போது கிடைத்த தகவலின்படி நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றுவிட்டார். அவர் வீரப்பனைச் சந்தித்தாரா என்பது பற்றி தகவல் ஏதும்இல்லை.
வீரப்பன் கொடுத்தனுப்பிய கேஸட்டில், தன்னைச் சந்திக்க தூதர் ஒருவரை அனுப்பும்படி மட்டுமே கேட்டுள்ளான். மற்றபடி வேறு எந்த கோரிக்கையோ,நிபந்தனையோ அதில் இல்லை.
ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பனிடமிருந்து மீட்பது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தகர்நாடக போலீஸ் ஐஜி சீனிவாசன் சென்னை வர உள்ளார் என்றார் சாந்த ஷீலா நாயர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications