இந்த வாரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் மீண்டும் கலவரம், பஸ்களுக்கு கல்வீச்சு

பெங்களூர்:

பெங்களூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு காஜனூர் பங்களாவிலிருந்து கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் வீரப்பன் மற்றும்அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதையடுத்து பெங்களூர் முழுவதும் கலவரம் வெடித்தது. பஸ்களுக்குத்தீ வைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை காலை பெங்களூரில் மாமூல் வாழ்க்கை திரும்பியது. பஸ்கள் வழக்கம் போல் ஓடஆரம்பித்தன. ஆனால் பிற்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் கலவரம் வெடித்தது.

ராஜ்குமார் ரசிகர்கள் பல இடங்களில் பஸ்கள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். அனந்தராவ் சர்க்கிள்,மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், விஜய நகர் ஆகிய இடங்களில் சென்ற பி.எம்.டி.சி.பஸ்கள் கல் வீசித் தாக்கப்பட்டன.

வன்முறையில் ஈடுபட்டதாக பெங்களூரில் ராஜ்குமார் ரசிகர்கள் உள்பட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர்முழுவதும், சிஆர்பிஎப் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+