காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு
கோவை வருகிறது ஆதித்யா பிர்லாவின் விஸ்கோஸ் இழை
கோவை:
திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில், புதியவிஸ்கோஸ் இழையை கிராசிம் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் திருப்பூரில்அறிமுகப்படுத்துகின்றன.
இதனால், ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என இந்நிறுவனங்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளன. கிராசிசாஃப்ட் என்ற இந்த இழையை பின்னலாடை ஏற்றுமதிவளர்ச்சிக் கவுன்சில் தலைவர் ரெட்டி துவக்கி வைத்தார்.
விஸ்கோஸ் இழை விற்பனைப் பிரிவுத் தலைவர் தாமஸ் வர்கீஸ், திருப்பூரில்நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் பருத்தியை மட்டுமே இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், கிராசிம் கம்பெனி, இந்தியாவால்விஸ்கோஸ் இழையை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையைஉருவாக்கி வருகிறது.
விஸ்கோஸ் இழைகளினால் ஆன அடைகளுக்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்புஉள்ளது. ஐரோப்பாவில், இந்த இழைகளை உற்பத்தி செய்ய அதிக செலவாகும்.இந்தியாவில் மலிவு விலையில் உற்பத்தி செய்ய முடியும். கிரசிம், நாள் ஒன்றிற்குஆயிரத்து 50 டன் விஸ்கோஸ் இழையைத் தயார் செய்யும் திறன் கொண்டது.
இந்த நிறுவனம், இந்தியாவில் 3 விஸ்கோஸ் தொழிற்சாலையையும்,இந்தோனேஷியா, மற்றும் தாய்லாந்தில் தலா ஒரு தொழிற்சாலையையும்கொண்டுள்ளது. விஸ்கோஸ் இழையை மிக குறைந்த விலையில் இந்நிறுவனம்விற்பனை செய்வதால், போட்டியிடுவதில் எவ்வித சிரமமும் இல்லை.
கிராசிசாஃப்ட் இழை பாலியஸ்டர் மற்றும் பருத்தியுடன் கலந்து குழந்தைகள் மற்றும்பெண்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். மிகவும் மிருதுவானதன்மையை இந்த இழை கொண்டுள்ளது என்றார்.
விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் பேசும்போது,ஏற்றுமதியாளர்கள் தங்களது பின்னலாடைகளை எளிதாக ஏற்றுமதி செய்ய இந்த இழைஉதவும். மேலும் மதிப்புமிக்க துணிகளை உற்பத்தி செய்யவும், சர்வதேச மார்க்கெட்டில்போட்டியிடவும் இந்த இழை உதவும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications