ராஜ்குமாருக்காக அணி திரளும் நடிகர் பட்டாளம்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் செல்லத் தயார்என்று மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ராவணன் கடத்திச் சென்ற சீதையை மீட்க இலங்கைக்கு ராமர் செல்ல வசதியாகராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக பாலம் அமைக்கப்பட்டது.அப்பணியில் ஆயிரக்கணக்கான வானரங்கள் ஈடுபட்டன.
இவை எல்லாவற்றையும் ஒரு அணிலின் பணிதான் ராமருக்கு வியப்பை அளித்தது.அதைப் போல, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ள பிரபல கன்னடதிரைப்பட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பணியில் தங்களது பங்கேற்பை அளிக்கதிரையுலகத்தினர் திரண்டு வந்துள்ளனர்.
வீரப்பனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த், கன்னடநடிகர் அம்பரீஷ், தெலுங்கு நடிகை ஜெயப்பிரதா ஆகியோர்ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மலையாளத்தில் பிரேம்நசீர், மது, தெலுங்கில் என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரைப் போல்கன்னடத்தில் தனது சிறப்பான நடிப்பால் உயரிய இடத்தைப் பிடித்துள்ளவர் ராஜ்குமார்.
அவரை மீட்கும் பணியில் கன்னட, தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகளை அடுத்துஇப்போது மலையாள நடிகர்களும் பங்கு கொள்ள வந்துள்ளனர்.
வீரப்பனைச் சந்திக்க ரஜினிகாந்துடன் நாங்களும் காட்டுக்குள் செல்லத் தயார் என்றுமம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதைப் போல ஹிந்தி திரைப்பட நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருக்கன்சின்ஹாவும் வீரப்பனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.ராஜ்குமாருக்காக வீரப்பனிடம் பிணைக் கைதியாக இருக்கவும் தயார் என்றும் அவர்கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications