குத்துமதிப்பாக "ஆடிட் செய்தேன் ... ஜெயலலிதா ஆடிட்டர்
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.திமு.க .பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுக்கு எதிராக அவரது முன்னாள் ஆடிட்டர் ராஜசேகரன்சாட்சியம்சொன்னார்.
ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஏறத்தாழ அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிந்துவிட்டது.ஜெயலலிதாவின் முன்னாள் ஆடிட்டர் ராஜசேகர் மற்றும் சுப்பிரமணியம் சுவாமியிடம்மட்டும் விசாரணை நடத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க ஆடிட்டர் ராஜசேகருக்குஅனுமதி அளிக்கக்கூடாது என்று ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில்புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். ஆனால், இம் மனுவை நீதிபதிஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து ஆடிட்டர் ராஜசேகர் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகிசாட்சியம் அளித்தார்.
நான் அபிராமபுரத்தில் வசிக்கிறேன். 27 ஆண்டுகளாக ஆடிட்டராக உள்ளேன்.1987-88-ம் ஆண்டு முதல் 1996-97-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வருமானவரிமற்றும் சொத்து வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளேன்.
ஜெயலலிதாவின் விவசாயக் கணக்கு சரியாகப் பராமரிக்கப்படவில்லை. எனவேஅவர்கள் தெரிவித்த குத்துமதிப்பான கணக்கை வைத்து நான் அதற்கான வருமானக்கணக்கைத் தாக்கல் செய்தேன்.
நான் தாக்கல் செய்த அனைத்து கணக்கு அறிக்கைகளிலும் ஜெயலலிதாகையெழுத்திட்டுள்ளார். ஜெயலலிதாவின் கையெழுத்து எனக்கு நன்றாகப்பரிச்சயமானது.
வருமான வரிக் கணக்கில் கட்டடம் கட்டிய செலவு, சுதாகரன் திருமணச்செலவு,சொத்துக்கள் பராமரிப்புச் செலவு ஆகியவை முக்கிய செலவுகளாகக்குறிப்பிடப்பட்டன என்றார் ராஜசேகரன்.
விசாரணை முடிவில் இவ் வழக்கில் நான் சாட்சியம் அளித்ததால் எனது உயிருக்குஆபத்து உள்ளது. ஆகவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ராஜசேகரன்கூறினார். அதை ஏற்ற நீதிபதி, ராஜசேகரனுக்குப் பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்குஉத்தரவிட்டார்.
முன்னதாக, ஆடிட்டரை சாட்சியம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரிஜெயலலிதாவும், சசிகலாவும் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துராஜசேகரனை சாட்சியம் அளிக்க அனுமதி அளித்தார்.
அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தீர்ப்புப்பற்றிஎழுத்துப்பூர்வமாக உத்தரவு வந்தால்தான் ராஜசேகரன் சாட்சியம் அளிக்கஅனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து ஒன்றரை மணி நேரம்தாமதமாக ஆடிட்டர் ராஜசேகரன் சாட்சியம் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications