கள்ளச் சாராயத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு ....

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளச்சாராய வியாபாரத்தைக் கைவிட்ட இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தரப்படும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளது. மதுவிலக்குப் போலீஸாரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுகள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 47 ஆயிரம் பேர் பெண்கள். 759 பேர் தடுப்புக் காவலில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். அபராதம் மூலம் ரூ. 9 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் தோறும் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம்கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முழுமையாககள்ளச்சாராயத்தை ஒதுக்கிய கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் கைவிட்டஇளைஞர்களுக்கு வங்கிகள் மற்றும் சமுதாய நல அமைப்புகள் மூலம் மறுவாழ்வு அளிக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை கைவிட்ட இளைஞர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்கவும் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரவும் வழி செய்யப்பட்டுள்ளது. கறவைமாடுகள் வாங்கவும் அவர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது என்று அதில்கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+