இது சாப்ட்வேர் யுகம்!
தமிழ்நாடு என்றால் மெட்ராஸ், கோயில்கள் (குஷ்புவுக்கு கோயில் உள்பட), சாம்பார், பட்டுச் சேலை, சினிமா,ஊழல், மைக்செட், காதுகுத்து-கடா வெட்டுதல் மட்டும் உங்களுக்கு "சட்"டென நினைவுக்கு வருகிறதா? நீங்கள்நிறைய அல்ல, ஒரு 5 வருடங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
இந்த "லிஸ்டில்" சாப்ட்வேரையும் பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்புங்கள், தமிழகம் சாதித்திருக்கிறது.வைரமுத்து பாஷையில் சொன்னால், சிறகுகள் விரித்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இப்போது 10ம் வகுப்பு தேறிய மாணவ, மாணவிகளின் ஆலோசனைகளில் அதிகம் அடிபடுவதுசாப்ட்வேர் கல்வி தான். கம்ப்யூட்டர் தான் எதிர்காலம் என்பது கிராம மாணவர்களையும் எட்டியிருக்கிறது. இதனால்தான் +2வில் கம்ப்யூட்டர், கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய முதல் குரூப்பைப் பிடிக்க ஒரு "குருச்சேத்திரபோரே" நடக்கிறது.
இது தவிர்த்து பி.காம் போன்ற வர்த்தக பாடங்களை படிக்கும் மாணவர்கள் கூட தனியாக கம்ப்யூட்டர்கோர்ஸ்களில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
நகரமா, கிராமமா என பிரிக்க முடியாத பகுதிகளில் கூட நெட் கபேக்களும், சைபர் வோர்ல்ட்களும் வலைவிரிக்கின்றன. அரசியலையும் ஊழலையும் ரசிகர் மன்றங்களையும் மீறி சாப்ட்வேர் துறை வளர்ந்து வருகிறது.பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களும் அவற்றின் மாநில அரசுகளும் தாரை-தப்பட்டை அடித்து தங்களின்சாப்ட்வேர் பெருமைகளை முழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அமைதியாய் ஜெயித்துக் காட்டியிருக்கிறது தமிழகம். காரியத்தில் கண் என்பார்களே அதைசெயல்படுத்தியுள்ளது தமிழ்நாடு.
இவை வெறும் பேச்சுக்கள் அல்ல. அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி குறித்தஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் Information Technology- led growth policies.A case study of Tamilnadu என்று ஒரு ஆய்வு அறிக்கையையும் Raising the global competitiveness ofTamilnadus Information Technology Industry என்று மற்றொரு ஆய்வு அறிக்கையையும் ஹார்வேர்ட்வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.
தமிழகத்தில் இருந்து 1995-96ம் ஆண்டில் 37 கோடி ரூபாய்க்கு மட்டுமே சாப்ட்வேர் ஏற்றுமதியானது. அப்போதுதமிழகத்தில் இருந்த சாப்ட்வேர் நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 34 மட்டுமே.
1999-2000ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதி 1,890 கோடியை தொட்டிருக்கிறது. இப்போது தமிழகத்தில் சுமார் 596சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன.
இந்தப் பெருமை யாரைச் சேரும். அரசையா? சாப்ட்வேர் நிறுவனங்களையா? கம்ப்யூட்டர் கல்விக்கூடங்களையா? இல்லை, படித்துவிட்டு சாதித்துக் காட்டிய மாணவர்களையா?.
அடுத்த வாரம் முதல் ஆராய்வோம்!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications