ராஜ்குமாருக்கு மருந்து அனுப்பினார் கோபால்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாருக்குத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் டானிக்குகளை நக்கீரன் பத்திரிக்கைஆசிரியர் கோபால், வீரப்பன் கூட்டாளிகள் மூலம் கொடுத்தனுப்பினார்.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக, இரு மாநிலங்களின் தூதராக கோபால் சத்தியமங்கலம் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். தற்போது காட்டில்வீரப்பனின் கூட்டாளிகளுடன் கோபால், தொடர்பு கொண்டுள்ளார்.
நடிகர் ராஜ்குமாருக்கு மூட்டு வலி உள்ளது. அவருக்குத் தேவைப்படும் மருந்துகளை, வீரப்பனின் கூட்டாளிகள் மூலம் கோபால் கொடுத்தனுப்பியுள்ளார்.
இத்தகவலை கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications