வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை: டிஜிபி
சென்னை:
காட்டுப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சந்தனக் கடத்தல் வீரப்பனைநக்கீரன் கோபால் இன்னும் சந்திக்க முடியவில்லை என்று தமிழக டிஜிபி எஃப்.சி.ஷர்மா தெரிவித்தார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ஏ. முத்துசாமி மற்றும்உள்துறைச் செயலர் சாந்த ஷீலா நாயர் ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனைநடத்திய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றுள்ளார். கடத்தப்பட்டவர்களை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் தீவிரமுயற்சியில் ஈடுபட்டள்ளன.
வீரப்பன் கோரிக்கையை ஏற்று அவரைச் சந்திக்க நக்கீரன் கோபால் காட்டுக்குள்சென்றுள்ளார். ஆனால், காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்,திட்டமிட்டபடி வீரப்பனை கோபால் சந்திக்க முடியவில்லை.
வீரப்பனை கோபால் சந்தித்துப் பேசியபிறகுதான் தற்போதைய நிலை என்ன,ராஜ்குமாரின் உடல் நிலை எப்படி உள்ளது, வீரப்பனின் கோரிக்கைகள் என்ன என்பதுதெயவரும்.
இதுவரை கோபாலிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
விரைவில் அவர் வீரப்பனைச் சந்தித்துப் பேசுவார் என்றும், அவரிடமிருந்து தகவல்வரும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.
வீரப்பனைச் சந்திக்க கோபால் காட்டுக்குள் சென்றுள்ளதை அடுத்து அவர் மீதுகர்நாடகத்தில் பதிவு செய்துள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாககர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கைகள் எதுவும் இங்கேஎழவில்லை என்றார் ஷர்மா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications