இருப்பது வேறு: வசிப்பது வேறு

Subscribe to Oneindia Tamil

-சுகி சிவம்
"வசி" என்ற ஒரு சொல் உண்டு. "வசிக்கிறேன்", "வசிக்கிறார்"என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். வசிப்பது வேறு; இருப்பது வேறு.

யாராவது நான் ஜெயிலில் வசிக்கிறேன் என்று சொல்லக் கேட்டதுண்டா?

என்னை ஜெயிலில் வைத்திருந்தார்கள் என்று தான் சொல்லுவார்கள்.

வீட்டில் வசிக்கிறோம். ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நாம் நம் விருப்பப்படி ஓர் இடத்தில் இருந்தால்வசிக்கிறோம். நம் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டிருந்தால் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஜெயிலுக்கும், வீட்டுக்கும் என்ன வித்தியாசம்? அங்கும் கதவு உண்டு, இங்கும் கதவு உண்டு. தாழ்ப்பாள்தான் வித்தியாசம் ஜெயிலில் வெளிப்பக்கம்தாழ்ப்பாள்.

வீட்டில் நாமாகக் கதவைச் சாத்துகிறோம். ஜெயிலில் அவர்களாகச் சாத்தி வைத்திருக்கிறார்கள்.

எனவே வசிப்பது என்பது நமது வசதிப்படி வாழ்வது. இருப்பது என்பது நமது விருப்பத்திற்கு விரோதமாக மற்றவர் கட்டுப்பாட்டில் இருப்பது.

உலகத்தில் இன்று வசிப்பவர்குறைவு. இருப்பவர் அதிகம். தமது விருப்பப்படி தமது கட்டுப்பாட்டில் தம்மை வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு இவர்களேயோகிகள்.

மற்றவரை அடக்கி ஆள வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். முட்டாள்கள், தங்களையே ஆள முடியாதவர்கள். தன் விருப்பப்படி தானேவாழாதவர்கள், மற்றவர்களை அடக்கி ஆள்வது எப்படி? நாம் நமது நிர்வாகத்தில் இருந்தால் வாழ்கிறோம். அல்லது வசிக்கிறோம். நமதுநிர்வாகத்தில் நாம் இல்லாவிட்டால் - இருக்கிறோம்.

காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க நினைக்கிறோம். எழுந்தால் - வசிக்கிறோம். வாழ்கிறோம். எழுந்திருக்க முடியவில்லை என்றால்இருக்கிறோம் என்று பொருள் .

வயிற்றில் அமிலம் சுரப்பு அதிகமானதால் காப்பி வேண்டாம் என்று முடிவு செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முடிவை காப்பாற்றினால் நாம்வாழ்கிறோம். முடிவை முடிவுக்குக் கொண்டு வந்து காப்பியாற்றினால் நாம் இருக்கிறோம்.

காலையில் மனைவி காப்பி வேண்டுமா என்றதும், புன்னகையுடன் வேண்டாம் என்றால் நாம் வாழுகிறோம். வசிக்கிறோம் . இன்னிககு மட்டும்கொடு. இருக்கிறோம். இருந்து தொலைக்கிறோம். இப்படி இருந்தால் நாளாக நாளாக நமக்கே நம்மைப் பிடிக்காது.

நாம் சொன்னபடி மற்றவர் கேட்கவில்லை என்று எரிச்சல் படுகிறோம். குற்றப் பத்திரிக்கை படிக்கிறோம். நாம் நினைத்தபடி நாமேநடக்கிறோமா? நம்மை எந்த இ.பி.கோ.வில் உள்ளே வைப்பது? நம்மை நாமே ஆளுகிறோமா? வாழ்கிறோம். வசிக்கிறோம்.

நம்மை நாமே ஆள முடியவில்லை யென்றால் இருக்கிறோம். இருந்து தொலைக்கிறோம்.! பொறிகளின் மீது தனி அரசாணை என்று பாரதி பாடினான்.நமது உத்தரவுக்கு நமது கண், காது, மூக்கு, வாய், உடம்பு கீழ்படிகிறதா?

நமது பொறிபுலன்கள் நமது வசத்தில் இருந்தால் - வசிக்கிறோம். வாழ்க்கை இனிமையாக நிறைவாக இருக்கும். நமது வசம் நாம் இல்லாதபோதுநாம் இருக்கிறோம்.

அடிமையாக இருக்கிறோம். அடிமை வாழ்வு எப்படி இனிக்கும்? எனவே நம்மை நாமே வசப்படுத்த வேண்டாமா? முடியுமா? முடியும்!.

ரமணருக்கும் ராமகிருஷ்ணருக்கும் முடிந்தது நமக்கு மட்டும் முடியாதா? முடியும். நிச்சயமாக முடியும்.

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+