For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பயில்வான் ஆகுமா "ஓமக்குச்சி காங்கிரஸ்?

By Staff
Google Oneindia Tamil News

வருகிறது தேர்தல். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.இந்த தேர்தலை எதிர்கொள்ள, அணி சேரவும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைநடத்தவும் வசதியாக தங்கள் பலத்தை சுயசோதனை செய்து கொள்வதுடன், மற்றகட்சிகளுக்கும் உணர்த்த மாநாடு, பொதுக் கூட்டம் என இப்போதே துவக்கி விட்டன.

கோவையில் சமீபத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரசின்பலத்தைக் காட்டும் சோதனைக் களமாக இருந்தது. கோஷ்டிப் பூசல் நிறைந்த தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டியில் இப்போது தான் அமைதி திரும்பியுள்ளது.

திண்டிவனம் ராமமூர்த்தியை நீக்கக் கோரி, போர்க் கொடி தூக்கிய கோஷ்டிகளின் பூசல்மறைந்து தற்போது அமைதி நிலவுகிறது. புதிய தலைவராகப் பதவி ஏற்றுள்ள ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன், தமிழகத்தில் காங்கிரசின் பெயருக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளார். ஆனால், கோஷ்டிப் பூசலை மட்டும் அவரால் இன்னும் முழுமையாககுறைக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கோவைக்கு சோனியா காந்தியை வரவழைப்பதிலும், கூட்டம் திரட்டுவதிலும்அக்கறை கொண்டவர் நீலகிரித் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும். முன்னாள் மத்தியஅமைச்சருமான பிரபு. தேயிலைப் பிரச்னையை மையமாக வைத்து, கூட்டத்தை திரட்டிவிட முடியும் என எண்ணிய பிரபு, கோவையில் காமராஜர் பிறந்த நாள் விழாவைநடத்த திட்டமிட்டு, பெருமளவில் விளம்பரம் செய்தார்.

இதனால், கோவை மாவட்டத்திற்கு அருகில் இருந்த நீலகிரியில் இருந்து கணிசமானஅளவு கூட்டம் வந்தது. இது அவருக்கு ஒரு வெற்றியாகவே இருந்தது. நீலகிரியில்சமீபத்தில் நடந்த தேயிலை கலாட்டாவால் பிரபுவுக்கு அங்கு செல்வாக்கு கொஞ்சம்கூடியிருப்பது உண்மை. இது வரும் சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனஎதிர்பார்க்கலாம்.

ஆனால், கோவையில் சோனியாவைப் பார்க்கக் கூடிய கூட்டத்தை வைத்து காங்கிரஸ்வலுப் பெற்று விட்டதாக எடை போட முடியாது. மாநில அளவிலான ஒரு கட்சிக்கு,அகில இந்திய அளவிலிருந்து வந்த தலைவரைப் பார்க்கத் திரண்ட கூட்டம் எனஒப்பிட்டால், மிகவும் சொற்பமானதே.

தமிழகத்தில் காங்கிரசின் பலம் என்ன என்பதை இக் கூட்டம் நிரூபிக்கும் என தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினாலும், இந்தப் பலம் தமிழக காங்கிரசுக்குபோதுமானதாக இல்லை. அவர் எதிர்பார்த்த ஒரு லட்சம் பேர் கூட இதில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் நீலகிரியில் மட்டுமே பலம்பெற்றுள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது. இதர மாவட்டங்களில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தான் தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்.

காமராஜர் பிறந்த நாள் விழா மேடையில் கூட, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அதிகம்பேர் இடம் பெறவில்லை. விமான நிலையத்தில், தங்கபாலு, குமரி அனந்தன்,அருணாசலம் உட்பட பலர் வந்திருந்தாலும், இவர்களை மேடையில் பார்க்கஇயலவில்லை.

தமிழகத் தலைவர்கள் யாரும் மேடையில் அதிகம் பேசவில்லை. சோனியா காந்தி,பேசி முடித்த பின்னர், வெகுநேரம் கையசைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கீழேஇறங்கி வந்து தொண்டர்களுடன் கை குலுக்கினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம்வந்திருந்ததையடுத்து, உணர்ச்சி வசப்பட்ட ஒரு காங்கிரஸ் பிரமுகர், மைக்கைப்பிடித்து, "சகோதரர்களே, இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள். எப்படி இருக்கிறீர்கள்.இவ்வளவு நாளாக வழி நடத்த ஒரு தலைமை இல்லாததால் தானே எல்லோரும்ஆங்காங்கே முடங்கிக் கிடந்தீர்கள். இப்போது நமக்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டார். நம்மை எல்லாம் விழிப்படையச் செய்வார் என தழுதழுத்த குரலில் கூறி,பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

நெகிழ்ந்து போன கூட்டம், ஆதரவாக கோஷம் எழுப்பியது. தமிழகத்தில் காங்கிரஸ்சொந்தக் காலில் நிற்க முடியாத நிலைதான் உள்ளது.

அ.தி.மு.க.,தமிழ் மாநில காங்கிரஸ் தான் அகில இந்திய காங்கிரசுக்கு "கை கொடுக்கவேண்டும். ஆனால், நீலகிரியில் மட்டும் காங்கிரசின் "கை வலுப் பெற்று வருகிறது.இதனை கவனித்தால் ஒழிய, திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் நீலகிரியில்தலைகாட்டுவது கடினம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X