காஷ்மீர் படுகொலைகள்: உள்நாட்டு பாதுகாப்பை தீவிரப்படுத்துகிறது இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீர் படுகொலைகளுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-யே-தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இப்படுகொலைச் சம்பவங்களுக்குமூல காரணம் என்று உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறைச் சம்பங்களில் இதுவரை 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 பேர் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள். இப்படுகொலைச் சம்பவங்கள் மிகவும் கண்டனத்துக்குரியது. ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புபோர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து அதைத்தொடர்ந்து இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாரானது.

இதற்கு இந்தியா ஒப்புதல் அளித்ததால் பயந்துபோன பிற தீவிரவாதிகள் அமைப்பு இப்படுகொலைச் சம்பவத்தை நடத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில்சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.

மத்தியப் புறக்காவல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் டி.ஆர்.தினகர், மற்றும் இன்ஸ்பெக்டர் திரிநாத் மிஸ்ரா தலைமையிலான தனிப்போலீஸ் படை சம்பவஇடத்திற்கு விரைந்துள்ளது.

முதல்வர்கள் மாநாடு:

மாநில முதல்வர்கள் மாநாட்டை வாஜ்பாய் வரும் சனிக்கிழமை கூட்டுகிறார்.

இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது எப்படி என்று அக்கூட்டத்தில் ஆராயப்படும்.

காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்திருப்பது நாட்டுக்கு விடப்பட்ட சவால். இதைப்பற்றி நாடாளுமன்றம் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறது என்று கூறினார்அத்வானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+