கடும் எதிர்ப்புக்கிடையே இலங்கையில் அரசியல் சட்டதிருத்த மசோதா தாக்கல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

2 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமை, அனைத்து இனத்தவர்களுக்கும் சமஉரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட-விவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் மசோதாவைத் தாக்கல் செய்தார். இதற்காக நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

அதிபர் சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் புதிய அரசியல்சட்டதிருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களாக உள்ள 2 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது அனைத்து இனைத்தைச் சேர்ந்தவர்களுக்கும்சமஉரிமை மற்றும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் ஆகியவை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு முக்கிய எதிர்க்ட்சி திடீரென கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் நாடாளுமன்றத்தில்பரபரப்பான சூழ்நிலை இருந்தது. சில புத்த அமைப்புக்களும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு முன்பு முக்கிய ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பின. இவற்றை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். இத்தனை எதிர்ப்பையும் மீறி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக திங்கள்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், புத்த பிட்சுக்கள் ஆகிய அனைவருடனும் அதிபர் சந்திரிகாஅரசியல் சட்ட திருத்த மசோதா குறித்து விவாதித்தார். இவ்விவாதம் சுமார் நான்கு மணிநேரம் நீடித்தது.

அரசியல் சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு இருந்ததால் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்த அமைப்பான மகா சங்கம், மகாநாயகா ஆகியவை நாடாளுமன்றத்திற்கு வெளியே மசோதாவை எதிர்த்துக் கோஷம் எழுப்பின. பழையஅரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் புதிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் புத்த அமைப்புக்களுக்கு அதிகாரங்களோ, சலுகைகளோ இல்லை என்றுஅவர்கள் குற்றம்சாட்டினர்.

இதேபோல் சிங்கள உருமாயக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்றவை நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு தங்களது எதிர்ப்பைத்தெரிவித்தன.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் காரு ஜெயசூர்யா பேசுகையில், புதிய அரசியலைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சிஓட்டளிக்காது. மசோதாவை தாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று புதன்கிழமை இரவு கூறியிருந்தார்.

தமிழர் கட்சிகள் தரப்பில் மசோதாவை ஆதரிப்பது குறித்து எந்தக் கருத்தும் கூறப்படவில்லை. டியூஎல்எஃப், பிளாட் அமைப்பின் தலைவர்கள் மசோதாஅவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று கூறினர்.

ஆகஸ்ட் 9 ல் வாக்கெடுப்பு:

மசோதா மீதான வாக்கெடுப்பு ஆகஸ்ட் 9 ம் தேதி நடக்கும் என்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவித்தார். ஆளும்கட்சியான மக்கள் கட்சிகூட்டணிக்கு 111 எம்பிக்கள் உள்ளனர். இது தவிர தமிழர் கட்சிகளும், மசோதாவை ஆதரிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்களில் எத்தனைபேர் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தந்தால்தான் மசோதாவை சுலபமாகநிறைவேற்ற முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி மசோதாவுக்கு எதிராக உள்ளதால் தமிழர் கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 24 ம் தேதி தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள் மசோதாவை தாக்கல் செய்ய அதிபர் விரும்பியதால்விரைவாகப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு மசோதா தாக்க்ல செய்யப்பட்டது. இம்மசோதா மூலம் 17 வருட இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்என்று இலங்கை அரசு நம்புகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+