இது வீரப்பன் டெக்னிக்!
சத்தியமங்கலம்:
தன்னை சந்திக்க வந்த நக்கீரன் கோபாலை வீரப்பன் சந்திக்கும் முறை மிக அலாதியானது, மிக டெக்னிகலானது.
முதலில் ஒரு இடத்தை வீரப்பன் சொல்வான். அங்கு கோபால் சென்று நிற்க வேண்டும். அங்கு அவரை ஒருவன்தொடர்பு கொள்வான். கோபாலையும் அவருடன் வருபவர்களையும் சோதனையிடுவான். சில விவரங்களைகூறிவிட்டு ஒரு குறிப்பிட்ட இடம் வரை அழைத்துச் செல்வான.
அங்கிருந்து மற்றொறு குழு கோபாலை அழைத்துச் செல்லும். உடன் வரும் நபர் பல சமிக்கைகளை செய்துகொண்டே செல்வார். பதில் சமிக்கைகளும் வரும். பயணம் தொடரும். குறிப்பிட்ட இடம் வந்த உடன் மற்றொருகுழு கோபாலை சந்திக்கும். அங்கிருந்து பல நபர்கள், பல இடங்களில் தொடர்ந்து மாறி, மாறி கோபாலைஅழைத்துச் செல்வர்.
இது தவிர வீரப்பனுக்கும் கோபாலுக்கும் இடையே செய்திகளை பரிமாறவும் ஆட்கள் உண்டு. செய்தி ஒருவர்மூலம் மற்றொருவருக்கு அனுப்பப்படும். ஆனால், இவர்களுக்கே கூட வீரப்பன் இருக்கும் இடம் தெரியாது.ஆனால், இவர்களை கடந்து செல்லும் செய்தி மட்டும் அடைய வேண்டிய இடத்தை சரியாகப் போய்ச் சேரும்.
சராசரியாக 2 நாட்கள் தொடர் பயணத்துக்குப் பின், கிட்டத்தட்ட அடர்ந்த காட்டுக்குள் 60-80 கி.மீ. சென்ற பின்தான் வீரப்பனை அடைய முடியும்.
இது தான் கடந்த காலங்களில் கோபால் காட்டுக்குள் வீரப்பனை சந்திக்க சென்றபோதெல்லாம் நடந்தது.இப்போதும் இதே தொடர் மனித சங்கிலி முறையைத் தான் வீரப்பன் பயன்படுத்துகிறான்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அரசுத் தூதராககாட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படைப் போலீசார் விலக்கிக் கொள்ளப்பட்டதால்வீரப்பனைச் சந்திப்பது கோபாலுக்கு எளிதாகிவிடும்.
சத்தியமங்கலம் வனப்பகுதி ஸ்தம்பிப்பு:
ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கடத்தியதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள தொட்டகாசனூரில்மலைவாழ் மக்கள் இரு தினங்களாக விறகுகளைச் சேகரிக்கச் செல்லவில்லை.
திம்பம், ஆசனூர், தலைமலை, பனஹல்லி, கடம்பூர், மாக்கம்பாளையம் ஆகிய காடுகளில் வசிக்கும் மலைவாசிகள்நெல்லிக்காய், கடுக்காய், சீமாத்துப்புல் ஆகியவற்றைச் சேகரித்து விற்பது வழக்கம்.
புபுதன்கிழமை வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து மலைவாசிகள்யாரும் விறகுகள் மற்றும் காய்களைச் சேகரிக்கச் செல்லவில்லை.
தாளவாடி, நெய்தாளபுரம், தலைமலை ஆகிய இடங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் திம்பம்மலைப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்-மைசூர் வழித்தடம் தவிர மற்ற வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில தனியார்பேருந்துகள் மட்டும் கொல்லேகால், மைசூருக்கு இயக்கப்பட்டன.
ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தாளவாடி பகுதிக்கு வரும் கன்னட ரசிகர்கள் எல்லையில் தடுத்துநிறுத்தப்படுகின்றனர். இதனால் சட்ட- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் போலீசார் கண்காணித்து வரு
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications