சிறப்பு நீதிமன்றத்தின் 11-வது தீர்ப்பு
சென்னை:
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்பட அவரது அமைச்சரவைச் சகாக்கள் ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரும், சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி ஜெயலலிதா உள்பட அவரது அமைச்சரவைச் சகாக்கள் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இவ்வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களை தமிழக அரசு அமைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்புத் துறையில் நடந்த ஊழல் வழக்கில் முதன்முறையாக தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்புத் துறை முன்னாள் இயக்குநர் அரிஹரனே விடுதலை செய்யப்பட்டார். 1999 நவம்பர் 26 ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெளியான தீர்ப்புக்கள் விவரம்:
2.முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மீது சொத்துக் குவிப்பு வழக்கு - 1999 டிசம்பர் 2 ம் தேதி தீர்ப்பு - நாகூர் மீரானுக்கு 3 ஆண்டு கடுங்காவல்.
3.முன்னாள் எம்எல்ஏ மல்லிகா மீது சொத்து குவிப்பு வழக்கு- 2000 ஜனவரி 12 ம் தேதி தீர்ப்பு- மல்லிகாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல்.
4.கொடைக்கானல் பிளசன்ட் வழக்கு -2000 பிப்ரவரி 2 ம் தேதி தீர்ப்பு- ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை, செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை.
5. ஐஏஎஸ் அதிகாரி இன்பசாகரன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு - 2000 பிப்ரவரி 10 ம் தேதி தீர்ப்பு- இன்பசாகரனுக்கு ஓராண்டு கடுங்காவல்.
6.முன்னாள் அமைச்சர் சேடப்பட்டி முத்தையா மீது சொத்துக்குவிப்பு வழக்கு - 2000 மார்ச் 8 ம் தேதி தீர்ப்பு- சேடப்பட்டி முத்தையாவுக்கு 25 மாதம் கடுங்காவல்.
7.முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மீது இலவச வேட்டி சேலை ஊழல் -2000 மார்ச் 16 ம் தேதி தீர்ப்பு-2 ஆண்டு கடுங்காவல்.
8.இலவச வேட்டி-சேலை -2000 ஏப்ரல் 20 ம் தேதி தீர்ப்பு-முன்னாள் அமைச்சர் மதுசூதனன் சகோதரி மகன் ஜெயப்பிரகாஷூக்கு 6 மாதம் சிறை.
9.சொத்துக்குவிப்பு வழக்கு-2000 ஏப்ரல் 28 ம் தேதி தீர்ப்பு-சேடப்பட்டி முத்தையா மகள் மலர்விழிக்கு ஒரு ஆண்டு சிறை.
10.கலர் டிவி ஊழல் வழக்கு-2000 மே 30 ம் தேதி தீர்ப்பு -ஜெயலலிதா, சசிகலா விடுதலை, முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 5 ஆண்டு சிறை.
11.ஜீவா போக்குவரத்துக் கழக ஊழல் -2000 ஆகஸ்ட் 4 ம் தேதி தீர்ப்பு-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 4 ஆண்டு கடுங்காவல்.
இதுவரை வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் நாகூர் மீரான், செல்வகணபதி, செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
மற்றபடி முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சேடப்பட்டி முத்தையா ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஏனென்றால் மதுசூதனனுக்கு இரண்டு ஆண்டுகளின் முத்தையாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும்தான் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டில் ஒரு வழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றொன்றில் விடுதலையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்குத் தடை ஏதும் இல்லை. இம்மாதம் 11 ம் தேதி டான்சி நில பேர ஊழல் வழக்கில் விசாரணை முடிய உள்ளது. இம்மாத இறுதியில் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications